தங்கப்பதக்கம்

பணத்தையும்

பாசத்தையும்

சரியாக சேர்க்க

தெரியாமல்

சுயநல சொந்தங்களுக்கு

இடையே மாட்டிக் கொண்டு 

தன்னலமற்று உதவிசெய்து

இளிச்சவாயன் பட்டம்

பெற்ற அப்பாவி அப்பா..

"கடவுளுக்கு தெரியும்"

என்னோட அன்பான

மனசும் அக்கறையும்

அம்மாவுக்காக

மனைவியிடமும்

மனைவிக்காக

அம்மாவிடமும்

ஏசசு வாங்கிய

அப்பாவி அப்பா...

தன்னை தோற்றக்கடிக்க

துடித்தவருக்கும்

துள்ளியோடி பிறரின்

மனம் துவண்டு விடாமல்

பாதுகாத்த அப்பாவி அப்பா

இன்று மேடையெறி

பட்டம் வாங்குகிறேன் 

அவரின் செல்ல மகளாக .. 

தக்கபதக்கத்தை தந்தையிடமிருந்தே 

வாங்க நினைத்து சொன்னேன். 

மரபுகள் பழக்கவழக்கங்கள் என்றே 

ஆயிரம் காரணம் பேசினர்..சற்றே

சிரித்தேன் சுற்றியிருந்த

காக்கிகளும் கட்சி நிர்வாகியும்

அதிகார பலமிக்க அரசியல்

தலைவர்களும் அதிர்ந்தே 

போயினர்.. அவர்களுக்கு 

தெரியாதே பலநாள்கள் பட்டினியோடு

பரிதவித்தாலும் முகத்தில் 

கவவையை காட்டாமல் சிரித்தபடியே

படிக்க வைத்த தந்தையின் 

பாசமும் நேசமும் அளப்பரியது

பல்கலை கழக விழாவில்

மரபுகளையும் மாண்புகளையும்

உடைத்துப் போட்டு

பட்டமளிப்பு விழாவில்

அவரிடம் பெற்ற பட்டத்தை 

அவருக்கே பட்டமளித்து

மிழ்கிறேன்...ஆடையில்

கூட நடிக்க தெரியாமல்

சிரிக்கும் அவரின் ஏழ்மைக்கு

மகுடம் சுட்டுகிறேன் 

நான் பெற்ற கல்வியால்

கல்லூரியே அதிரந்தாலும்

எனக்கென்ன கவலை

அப்பாவி அப்பனுக்கு நான்

செய்யும் மரியாதை..

கள்ளம் கபடமில்லாத 

பாசமான அப்பனின் காலடியில் 

எனது தங்கப்பதக்கத்தை 

மேடையில் இருந்து இருவரும் 

இறக்கிய போது மொத்த அரங்கமும் 

எழுந்து நின்று கைகளை கூப்பிய

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்நோற்றான் கொல் என்னும் சொல்.. மன்னிக்கவும் "மகள் தந்தைக்கு" 



No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...