.. அவன் எந்த தப்புமே செய்யலையே..

ஏன்ப்பா இவன் அப்படி என்ன தப்பு செஞ்சுட்டான்னு இப்படி பண்ணுறீங்க..நீங்க எல்லோருமே யோக்கிய சிகாமணிகளா...அவன் எந்த தப்புமே செய்யலையே என்று ஓருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்.. பாவம் யார் பெத்த பிள்ளையோ...பசி கொடுமையில் இரண்டு வடை தின்னுட்டான்...அவன் கையில் காசு இருந்திருந்தா கொடுத்திருக்க மாட்டான்னா... இன்றோ நாளையோ என்று தள்ளாடிக் கொண்டிருந்த பெருசு சத்தமாக பேசுவது பற்றிய கவலை இன்றி


சுற்றி இருந்த கூட்டத்தில் ஓர் உத்தமன் கத்தின்னான்.. இந்தா மாதிரி திருட்டு நாய்களை எல்லாம் போலீசுல பிடிச்சு கொடுக்கணும் அப்படி செஞ்சா தான் இந்த நாயீக்கு  புத்தி வரும்

ஆண்கள், பெண்கள்,படித்தவர் படிக்காதவர், ஜாதி, மதம் என்ற பேதமின்றி அந்த மக்கள் அனைவரும் இந்த ஓர் விஷயத்தில் மட்டும் ஓற்றுமையா தனது வேற்றுமைகளை எல்லாம் மறந்து அந்த நடுத்தர வயது இளைஞன் அடிக்க வேண்டும் என்ற ஆத்திரத்தில் ஓற்றுமையாக இருந்தனர்.

கூட்டத்தில் விலகிக் கொண்டு.ஏதோ இமயமலயை தொட்ட டென்சிங்..யாருமே தொட முடியாது என்ற சந்திரனின் கால் பதித்த ஆம்ஸ்டாரங்க் போல நானும் அந்த கூட்டத்திற்குள் ஐக்கியமாக முயன்றேன்..

சின்னஞ்சிறு விஷயத்துக்கு கூட எளிதில் உணர்ச்சிவசப்படும் எனக்கே அந்த மனிதனின் முகத்தை பார்த்தவுடன் .. இரக்கமாக இருந்தது.. பணக்கார வீட்டு பையனோ அல்லது மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்ட மனிதனைப் போல இருந்தான்.

அவனை இரண்டு போடு போடுங்க என்றே இன்னும் ஆத்திரம் தீராமல் கத்திய கூட்டம்..

பரபரப்பான அந்த ரதவீதியில் மாலையில் தனது அதிகாரி வரும் நேரத்திலா இப்படி நடக்க வேண்டும்..ஆண்டவா..புதுசா வேலைக்கு சேரந்தவனை பாடாய் படுத்தும் இந்த போலீஸ் வேலைக்காக இந்த வருஷம்..ச்சே எப்படியெல்லாம் கனவு கண்டேன்.. இந்த உலகமே இப்படித்தானா..என்ற நினைப்பில் கோவிலில் இருந்து வெளியே வந்த போலீஸ்

சார் அங்கே ஏதோ பிரச்சினை போல தெரியுது போய் பாருங்க.. ராங்க் ரூட்டில் வந்த டூவீலர்காரன் தன்னை நல்லவனை போல காட்டிக் கொண்டு விரைந்து சென்றான்.

சற்று தள்ளி நின்று கொண்டிருந்த கூட்டத்தை நோக்கி வேகமாக ஓடினான்.புதிதாக வேலைக்கு சேர்ந்து இரண்டு மாதம் கூட நிறைவு பெறாத கேசவன்.. டேய் நீயும் கூட வாடா.. ஓர் தைரியமாக இருக்கும்.. செந்திலும் அவனுடன் சேர்ந்து அங்கே சென்றான்.

எப்படித்தான் மூக்கு வேர்க்குமோ..வந்துட்டானுங்க.. இந்த சண்டைய காரணம் காட்டி இரண்டு பக்கமும் சில்லறைய பார்த்துட்டு போவானுங்க பாரூ... புதிதாக கல்யாணமாகிய தனது புத்திசாலி மனைவிக்கு உலக அறிவை மெதுவாக அவளின் காதுக்கு மட்டும் கேட்கும் படி சொல்ல முயற்சி செய்த இளைஞன் பேசியது செந்தில் காதில் விழுந்தது..

முறைத்த படி அவனை நோக்கி திரும்பியவனை.. டேய் இங்கேயும் உன் சண்டை புத்திய காட்டாதேடா..நாம வேலைக்கு புதுசு நாம லஞ்சமே வாங்க கூடாது என்று நினைச்சு வாழுறது அவங்களுக்கு புரியாதுடா வந்த வேலைய மட்டும் பாரூ..

இவர்களின் பேச்சை கேட்டு பயத்தில் நடுங்கிய புதுமாப்பிள்ளை...தனது ஆசை மனைவியிடம் சொன்னான்.. எல்லாம் அந்த எதிர்த்த வீட்டுக்காரி பார்த்த பார்வைதான்..நாம டூவீலரில் வீட்டை விட்டு கிளம்பும்போதே எங்கே போறீங்கன்னு கேட்டாளே.. தரித்திரம் பிடிச்சவ ... தனது குறையை யாரோ ஒருவர் மீது போட்டு மனைவியிடம் அன்பை எதிர்பார்த்த படி நின்ற இளைஞன்.

ஆமாம்.. ஆமாம்... எனக்கு இப்படி நிறைய சம்பவம் நடந்திருக்கு வாங்க போகலாம் நமக்கு எதுக்கு ஊர் பொல்லாப்பு..அவனை இழுத்த படி கூட்டத்தில் இருந்து வெளியேறினர் அந்த புதுமண தம்பதி..

ஏய்..தள்ளு..தள்ளு.....என்னைய்யா இங்கே ஓரே கூட்டமா இருக்கு..யாருய்யா இவன் எதுக்கு இப்படி மயங்கிப் போய் கிடக்கிறான்...

சார் இந்த பயலை பிடிச்சு உள்ள போடுங்க..பரபரப்பான இந்த ரோட்டு கடையிலையே வடையை திருடி தின்னா எவ்வளவு திமிரூ பிடிச்சவனா.. இருப்பான்.. யாரோ ஓருத்தர் சொல்லவும்..

ம்க்கும் இப்படி வடை திருடியவன்.. செருப்பு திருடியவனை எல்லாம் பிடிக்க சொல்லுங்க..கோடி கோடியா கொள்ளை அடிக்கிறவனை கையெடுத்து கூப்பிடுங்க எரிச்சலாக சொன்ன கேசவன்..

டேய் நீ வாயை வைச்சுகிட்டு சும்மா இரு.. இந்த கூட்டத்தில் ஏதாவது ஓர் போலீஸ் இருந்தாலும் நமக்கு எதிரா ஓர் ரிப்போர்ட் எழுதினாலும் நம்ம சீட்டை கிழிச்சுடுவாங்க.. ஆமா பொல்லாத உத்தியோகம் ..சம்பளத்தை தவிர என்ன கிடைக்குது.. நான் ஏதோ லஞ்சம் வாங்குற மாதிரியே எல்லாவனும் பார்க்கும் போது எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா..

ஊர்ல ஆடு மேய்க்கும் போது கூட இந்த அளவுக்கு மன அழுத்தம் கிடையாது..

சரி..சரி.. உன் உணர்ச்சியை எல்லாம் இங்கே காட்டாதே.. இந்த ஜனங்களை பொறுத்த வரை நாம போலீஸ்காரன் அதுக்கு ஏத்த மாதிரி கெத்தா நடந்துக்கோ.. இல்லாட்டி கையை கட்டிகிட்டு விறைப்பா நில்லு மத்த விஷயத்தை நான் பார்த்துக்கிறேன் கேசவன் சொன்னான்...

அவனை 

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...