வாழ்ந்து காட்டு ஏளனம் செய்பவர் முன்னால்...

இவன்,... ஏன் காதல் கவிதை கதைகளை அதிகம் எழுதுகிறான்.


ஏன்னா GH-ல்  உயிருக்கு போராடிய ஓருவன் சொன்னான்..என்னை யாரும் புரிச்சுக்கலை அதான் இப்படி என்றான்..அவனை ஆட்டோவில் கொண்டு செல்லவதை பார்த்து அவனின் பிஸ்கட் வாங்கி சாப்பிட நாய் GH வரை ஆட்டோவை பின் தொடர்ந்து வந்து ஜன்னல் வழியாக அவனிருந்த கட்டிலை வெறித்த படி பார்த்துக் கொண்டே இருந்தது.. தயவுசெய்து நண்பர்களே காதல் கிடைக்க வில்லை என்றாலோ உன் அன்பு யாருக்கும் புரியவில்லை என்றாலோ கலங்காதே... இறைவனின் அன்பையே புரிந்து கொள்ள இயலாத மனிதர்கள் தான் இந்த உலகில் ஏராளம். இந்த உலகில் நீ உதாசீனம் செய்யபட்டதாக உணரலாம்.ஆனால் உனக்கான தேவையும் சேவையும் உனது அன்பும் நிச்சயமாக உலகம் ஓர் நாள் புகழும் அது வரை பொறுமையாக இரு 


ஓர் நண்பன் சொன்ன உண்மை கதை-கூட ஓர் நாள் சிலரின் அவமானகரமான பேச்சுக்களால் தற்கொலைக்கு முயன்றது உண்மையே.. பாலில் விஷத்தை கலந்து குடிக்க நினைத்த நேரத்தில் ஓர் போன் கால்.. சார் credit card -வேணுமா.என்ற ஓர் பெண்மணி எதிர் முனையில் கெஞ்சுவது போல் இருந்தது அவளின் குரல்.

Sorry madam, எனக்கு credit card வேண்டாம் என்றவுடன்.. சார் இந்த மாதம்  ஓர் கார்டு கூட விற்பனை செய்யலை என்று மேனேஜர் திட்டுறார்..எல்லோருமே Credit card வேண்டாம் என்று தான் சொல்லுறாங்க

.ப்ளிஸ் சார் நீங்க கார்டு பயன்படத்தா கூட பரவாயில்லை..எனக்கா ஓரே ஓர் கார்டு எடுத்துகோங்க சார்..

ஹலோ மேடம் நீங்க யாருன்னே தெரியாது.. நான் எதுக்கு உங்களுக்காக எடுக்கணும். எரிச்சலாக பேசியதை கூட பொருட்படுத்தாமல்

அவள் மேலும் சொன்னாள்.. சார் எங்க அப்பா நோய்பட்டு ஆஸ்பத்திரியில் இருக்காரூ நா அடுத்த மாசமும் வேலையில் இருந்தா தான் சம்பளம் தருவாங்க..என்னை மாதிரி ஏழைக்கு நீங்களாவது ஹெல்ப் பண்ணுங்க சார் என்ற போது சார்ஜ் குறைந்த காரணமாக போன் கட் ஆனது..

அதன் பிறகு அவருக்கு வாழ வேண்டும் என்ற எண்ணம் வந்தததாம்.. இன்றோ ஓர் மாபெரும் சாதனையாளர் அவரை நம்பி ஆயிரம் பேர் அந்த நிறுவனத்தை பல கோடி ரூபாய் வருமானத்தை அடையச் செய்த வெற்றியாளர்.

நம்புங்கள் நண்பர்களே உங்களின் அன்போ..பாசமோ..நேசமோ... குடும்ப பிரச்சினையோ... யாருக்கும் புரியவில்லை என்று கலங்காதீர்கள்...

வாழந்து காட்டுங்கள்... யாராலும் பிறருக்கு கொடுக்க இயலாத மாசற்ற அன்பையும் நேசத்தையும்... வெற்றியையும் நம்மை சுற்றி உள்ள அனைவருக்கும்.. ஏனென்றால் உங்களின் கஷ்டமே உங்களை புடம் போட கடவுள் வைத்த சோதனே..அதை சாதனையாக மாற்று..நல்லதே நினை நல்லதே நடக்கும் 


No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...