மயிலெறி வரவேணும்

 கோடி செல்வம் மாடு 

மனை  மக்கள் வீடெல்லாம்..

அதிகார பதவிகளும் 

சில நொடிகளில் ஆட்டம் 

கண்டு அதிர்ந்தே தரையிலே 

தலைகுப்புற வீழந்து விடுமே .

நிலையற்ற அவையெல்லாம் 

நிலையான உனதடிக்கு 

ஈடாகாது முடியுமோ...

ஈகை குணத்தை இயல்பிலே 

கொண்ட ஈசன் மகன் நீயன்றோ... 

அனைத்தும் அற்ப சுகமென்றே 

அறிவுச் சுடர் தந்தவனே... 

அழிவில்லா தமிழ் மொழியை 

தனதாக்கி சிரிக்கும் சிங்கார வேலனே... 

தமிழ் மொழியை தரணி தழைக்க 

வைத்த தணிகாசல மூலவனே... 

தஞ்சமெனறு வந்துவிட்டேன்..

நீ என்தன் தெய்வமென்றால்  

உன் தமிழை என்னுள் தந்த 

தரணிமெல்லாம் தளைக்க செய்வாய்யோ...

எங்கிருந்தோ வந்த மொழியை 

கற்றவும் முடியாமல் கற்றது போல் 

களிநடனமிடும் கூட்டப்பா...

தடைகள் எல்லாம் தகர வேண்டும்..

தரணியில் உன்புகழே பாடவேணும்..

கையெடுத்து தொழுகின்றேன்..

குறிஞ்சி நிலத்தலைவனே.. 

குறையெலலாம். களைந்திடப்பா

உன் மொழியை என் வழியே தந்திடப்பா..

தீந்தமிழ் சொல்லெடுத்து

இலக்கியம் படைத்திடவே

இன்முகமாய் வந்திடப்பா..

இரு மனைவி கட்டினாலும்..

இருறுமாப்பு உனக்கில்லை..

உன்னை போல் மாறிடவே

துடிக்கின்றேன் தூய தமிழ்

எடுத்து பாமாலை கட்டிடவே

பாலமுருகனே மயிலெறி வரவேணும்

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...