ஆடு மேய்ப்பது ஓர் பொருளாதார சுதந்திரம்

 

 



ஆடுகள் கிராமத்து மக்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்து ஓர் பொருளாதார மேம்பாடு.

இன்னும் எளிதாக சொல்லப் போனால் ஆடுகள் ஒவ்வொன்றும் ஆயிரம் ரூபாய் பணம்.


நகரத்தில் இருப்பவர்களுக்கு பணம் என்று சொன்னால் தான் புரிகிறது.


ஆடு என்பது எங்களின் வளர்ப்பு பிராணி, அதை நாங்க மிகவும் பாசத்துடன் வளர்க்கிறோம் என்றால் பலருக்கு புரிவதே இல்லை 



ஓவ்வொரு வாரமும் ஓவ்வொரு மாவட்டத்தில் ஆடு விற்பனை நடைபெறுகிறது. அதனால் கிராமப் பொருளாதாரம் எவ்வளவு என்பதை அறியாமல் பேசும் மக்கள் ஏராளம்.


I.T கம்பெனியோ..அரசு நிறுவனத்திலோ கூட உங்களால் மாத சம்பளமாக இவ்வளவு சம்பாதிக்க இயலுமா என்பது கேள்விக்குறி.


வெயிலும் மழையும் பனியும் எப்படி இருந்தாலும் அந்த உயிரினங்களுக்கு உணவு கொடுக்க நினைத்து தான் வளர்க்கும் பிராணி மீது மிகுந்த அக்கறை செலுத்தும் ஆடு மேய்பவனுக்கு தான் அதன் வலியும் வேதனையும் புரியும்.


ஆடு -ஓர் பொருளாதார சுதந்திரம்


ஏசி அறையில் இருந்து கொண்டு உலக விஞ்ஞானம் பேசுபவர்களுக்கு வயல் வெளியில் எனது நண்பர்கள் படும் கஷ்டம் எப்படி புரியும்.


ஓர் மாதம் சம்பளம் வராவிட்டால் நகரத்தில் வாழ்பவர்கள்,வேறு வேலை தேடி போய்விடுவர்.

ஆனால் விவசாயி எத்தனை வருசத்துக்கு தனது நிலத்தில் இழப்பு ஏற்பட்டாலும், தான் உண்மையான நேசிக்கும் வயலை பாதுகாக்க பாடாத பாடு படுகிறான்.

பொருளாதாரத்தில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளை சரி செய்யவே ஆடு மாடு மற்றும் இன்ன பிற உயிர்களை வளர்க்கிறான்.


கிராமத்தில் இருப்பவர்களுக்கு உதட்டில் தேனை வைத்து பேசத் தெரியாது என்பது உண்மை தான்.ஆனால் ஓவ்வொரு கிராமத்துகாரனின் மனதிலும் இருக்கும் பாசமும் நேசமும் அளப்பரியது.


பத்து வருடங்களுக்கு முன்பு நீங்கள் வந்துவிட்டு போனதை கூட பெருமையா நினைத்து பேசும் பாசமிக்க உறவுகள் எமது கிராம மக்கள்.


எங்களின் பொருளாதார சுதந்திரம் வேண்டிய ஆடுகளை மேய்கிறோம்.


ஆடு மேய்ப்பது ஓன்று கேவலமான செயல் அல்ல. 

யாரிடமும் சென்று கைகட்டி வாய் பொத்தி தன்மானத்தை இழந்து வேலை பார்க்க நினைக்காமல் சுயமாக வேலை பார்க்கிறான் எனது சக சகோதரன்.

ஓர் குறிப்பிட்ட கட்சியை சார்ந்த தலைவரை பற்றி விமர்சனம் செய்ய நினைத்தால் அவரின் செயல்பாடுகளை பற்றி பேசுங்கள்.


ஓருவரை ஆட்டுக்குட்டி ஆடு என்று பேசுவதன் மூலம் உங்களால் யாரையும் மட்டம் தட்டி விட முடியாது.



ஓருவரை நீங்கள் குறைவாக பேசுவதன் மூலமாக், அவரின் செயல்பாடுகளை கண்டு அச்சமடைவது தெரிகிறது.

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...