பக்கத்து வீட்டு கிழவி

காதலியின் பணத்தை

மட்டுமே காதலித்தவன்

தாலி கட்ட பல இலட்சம்

வாங்கிவிட்டு தனது

வீட்டிற்கு அழைத்துச் சென்றான்

அவளை சம்பளமில்லாத

வேலைக்காரியாக

அன்பை மாத்திரமே

எதிர்பார்த்து காதலித்தவனோ.

உன்னை பெற்றவரும் 

என்னை பெற்றவரும்

நமக்கு தாய் தந்தை தானே

என்றே சொல்லி

ஆயிரம் கஷ்டங்களை

கடந்து காதலிக்கிறான்

அவளின் தாய் தந்தையினையும்

தன்னை பெற்ற தாய் தந்தை

போலவே - இப்படி ஓர்

மருமகன் கிடைச்சது

உனக்கு பூர்வ ஜென்ம

புண்ணியமென்றே

கேலி பேசுகிறாள்..

கடவுளையே நம்பாத

பக்கத்து வீட்டு கிழவி


No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...