வணக்கம் சொந்தங்களே...நட்பே...

ஓருத்தருக்கு கல்யாணம் ஆகி சில வருடங்களாக குழந்தை இல்லை என்பது ஒன்றும் பாவச்செயல் அல்ல.

அவங்களோட மற்றும் அவங்க அம்மா அப்பா பாவ புண்ணியத்தை பேசுற யோக்கியதை யாருக்கும் கிடையாது.ஏன்னா நீங்க யாரை கேலி பேசுறீங்களோ அவங்களுக்கு வருங்காலத்தில் நாலு ஐந்து குழந்தைகள் பிறந்தா.. அதுக்கு பிறகு உங்க மனநிலை எப்படி இருக்கும்.


உங்களோட வாழ்க்கையில் உங்களுக்கு கிடைச்ச விஷயங்கள் கூட கிடைக்காத எத்தனையோ மக்கள் இந்த உலகத்துல இருக்காங்க. அப்படி இருந்தும் இறைவன் படைத்த இந்த உலகத்துக்கு தன்னால இயன்ற உதவியை செய்ய முயற்சி செய்யுறாங்க..

உதாரணமாக படிப்பு பதவி வேலை கல்யாணம் சொந்த வீடு இன்னும் எத்தனை எத்தனையோ.. கடவுள் உங்களுக்கு இத்தனை வசதி வாய்ப்புகள் கொடுத்த பிறகும் ஏன் இந்த  யோசனை.

எதுவுமே இல்லாம, தனக்கு எதுவுமே இல்லை என்ற உணர்வு கூட இல்லாம பிறகுக்கு உதவுற மனுஷனை முதுக்கு பின்னால் சிரித்து பேச வேண்டிய அவசியம் தேவையா.

ஓர் வேளை நீங்க ஓருவரை கேலி கிண்டல் பேசி சிரிப்பது அந்த மனிதனுக்கு தெரிஞ்சா.. எவ்வளவு பெரிய மன வேதனையா இருக்கும் தெரியுமா..

தனக்கு என்று எதையும் சேர்த்துக் கொள்ளாமல் வாழுற வாழ்க்கை எவ்வளவு அழுத்தமாக இருக்கும் என்று புரியுமா.

குழந்தை இல்லை என்ற ஓருவரை நீங்க உதாசீனமா நடத்தினா அவங்களின் மனநிலை எப்படி கஷ்டப்படும் என்று உணர்ந்து பார்த்து இருக்கீங்களா..

உங்களோட மகனுக்கோ மகளுக்கோ அரசாங்க வேலை கிடைத்த காரணமாக. உங்களின் சொந்தகார குழந்தைக்கு.நீங்க தான் ஏதோ உலகத்துலையே பெரிய விஞ் மாதிரி அரசாங்க உத்தியோகம் கிடைக்க வழி சொல்லுவது என்ன நியாயம்.

மீண்டும் ஒர் முறை தெளிவா சொல்கிறேன்.உங்களோட வேலைபார்த்தவரோ..சொந்தமோ...நட்போ... அவங்க இல்லாத போது அவங்களை போலவே நடிச்சு காண்பித்து சிரிக்காதீங்க.

ஏன்னா ஓர் வேளை அந்த நபர் உங்களை ரொம்ப உயர்வா நினைச்சு இருக்கலாம்.

அப்படி அவரை பத்தி கேலியோ விமர்சனமோ செய்ய நினைச்சா.அவங்களோட முகத்துக்கு நேரா பேசுங்க சொல்லுங்க.. ஓருத்தர் இல்லாத போது அவரை பத்தி நல்ல விஷயத்தை மட்டும் பேசுங்க புரணியை அல்ல.

உங்களுக்கு கடவுள் எவ்வளோ நல்ல விஷயத்தை கொடுத்து இருக்கான் அதை வைத்துக்கொண்டு நிம்மதியா வாழ பழகுங்க.அதை விடுத்து எங்களைப் போன்ற எத்தனையோ விஷயங்கள் இல்லாமலும். இருப்பதை கொண்டு சந்தோஷமா வாழும் எங்களை விமர்சனமோ வியாக்கினமோ செய்ய வேண்டிய அவசியம் எதற்கு.

அழுத்தம் திருத்தமாக சொல்லுறேன் உங்களை மாதிரி முதுக்கு பின்னால் பேசுற கோழை நானில்லை.உங்களோட முகத்துக்கு நேரா பேசினா உங்களால் அதை தாங்கிக் முடியாது.. ஏன்னா சரியா பயந்தாங்கொள்ளி தான் கேலி புரணியெல்லாம் பேசுவான்..

வணக்கம் சொந்தங்களே நட்பே...


No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...