வாகனங்கள்
வேகமாக செல்லும்
நாற்கர சாலையில்
வளைந்து நெளிந்த
சாலையின்
மேம்பாலத்தின் கீழே
வேப்பமரத்து நிழலில்
அப்பனுக்கு துணையாக
வியாபாரம் செய்கிறாள்
குட்டி தேவதை...
சின்னஞ்சிறு அரக்கு
பாவாடை மஞ்சள் நிற
ரவிக்கை சட்டை..
மெளனமாய் சிரித்தே
அனைவரின்
முகத்திலும்
அன்பை பரப்புகிறாள்
நெற்றியிலே குங்கும பொட்டு
இந்த குட்டி தேவதை...
மாபெரும் பங்களாவின்
அனைத்து சுகத்தையும்
அனுபவித்து விட்டு...
பால்கனியில் வந்து
நின்று கையசைக்கும்
வேடதாரி போல்
அல்லாமல் இயல்பாய்
பேசுகிறாள்...
பணக்கார தோரணையில்
இருக்கும் மனிதரின்
மனதிலும் பாசத்தை
விதைத்து விடும்...
ஆற்றல் கொண்டவள்
இந்த சின்னஞ்சிறு
குட்டி தேவதை...
கீச்சு குரலில்... கேட்கிறாள்...
தன் குடும்பத்தின் ஏழ்மை
மறந்து வாழ்ந்துவிட துடித்தபடியே
அடிவயிற்றில் இருந்தே
வருகிறது அந்த
அற்புதமான கீச்சு குரல்...
தனக்காக தகப்பன்
ஆசையாய் வாங்கி வந்த
கிரீம் பிஸ்கட்
பாக்கெட் டாமியுடன்
பகிர்ந்து சாப்பிட்டுகிறாள்
உனக்கு ரொம்பவே
பசிக்குதா "டாமி" என்றபடி
ஓற்றை பிஸ்கட்
விழுங்கி விட்டு
மீதியை டாமிக்கு
கொடுத்தபடியே....
தன் தாய்மையை
டாமிக்கும் புரியவைத்தாள்
அருகே வந்த கொகுசு
காரின் கண்ணாடிகள்
இறங்கும் முன்னே... தன்
கீச்சு குரலில் கேட்டாள்...
சார் இளநீர் வேணுமா
இளநீர் வேணுமா....
கீச்சு குரலுக்கு
ஒத்திசைவு தருகிறது
மரத்தின் மீதிருந்தே.
குயில்களும் ஏனென்றால்
பேசுவதே...
குட்டி தேவதை..
No comments:
Post a Comment