உயிர்நாடி

 உயிர் நாடி

ஓரே ஓர் முறை
எதிர்பாராத விதமாக
என்றாலும் பரவாயில்லை
அல்லது திட்டமிட்டு
போனாலும் பரவாயில்லை.
எப்படியாயினும் ஓர் முறை
அரசு மருத்துவமனையின்
அருகில் சென்ற பாருங்கள்
ஓவ்வொரு நாளும்
ஓவ்வொரு கதையுடன்
வரும் மக்களின்
துயரத்தை வார்த்தைகளில்
எழுத முயல்கிறேன்....
வருமானமின்றி
மருத்துவமனை வாசலில்
உயிருடன் போராடும்
உணர்ச்சி மிகு தருணத்திலும்
வீட்டுல மாடுகண்ணு
என்னாச்சு....
சுத்தி நிற்கும்
சொந்தங்கள்
அவரின் பாசத்தை
உணருகிற நேரமது
பாசத்தை வேஷமின்றி
பகரும் ஏழைகளின்
துயரத்தை அறிந்து
கொள்ளாத இயந்திர மனிதர்களே
ஓர் முறையெனும்
உணர்ந்து பாருங்கள்
உங்களின் மனதிலும்
இயந்திர சாதனங்கள்
உருகிப் போய்
அன்பெனும் உணர்வு வரும்.... நான் எனது
என்ற அலட்டலும்
உருட்டலும் .
அதிகார ஆணவமும்.....
சில கால ஆட்டங்களே..
அன்பு ஒன்றே தான்
உலக உயிர்களின் உயிர்நாடி

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...