சாய்வு நாற்காலி


யாருக்கும் எந்த
இடைஞ்சலும்
தொந்தரவும் கொடுக்காம..
ஆஸ்பத்திரி அவஸ்தைபடாம
படுக்கையில் படுக்காம
நிம்மதியாக .......
அடிக்கடி முணுமுணுத்த
வார்த்தைகளை பலமுறை
கேட்டதால் சலிப்பு தட்டியது...
சில நேரங்களில்..
முதல் வார்த்தையை
தொடங்கியதும்....
திருக்குறள் மனப்பாடம்
போல திருப்பிச் சொல்லிவிட்டு
இதைத்தானே சொல்லவந்தீங்க...
கண் ஓரத்தில் வழிந்த
நீரை துடைத்த படி
வயசான காலத்துல
இதுவும் மனப்பாடம் தான்.....
ஏளனமாக சிரிப்பார்....
கடவுள் இருப்பதாக
சொல்லிய இடங்களை கூட
சுற்றுலா போலவே
நினைத்து பேசுவார்.....
நட்ட கல்லும் பேசுமோ
நாதன் உள்ளிருக்கையில்
பசி என்று கேட்டவனுக்கு
உணவு கொடுப்பது மட்டுமே
உயர்வு என்பார்..
ஏனோ சொல்லும்
பொழுது வேடிக்கையாக
தெரிந்த சொல்
வயதான காலத்தில்
புரிகிறது...
சொந்த பந்தங்களுக்கு
அள்ளிக் கொடுத்தாலும்
அவருக்குள் இருந்த
தேடல்கள் எத்தனையோ
வலிகளை சுமந்த
வரிகளை நினைப்பதுண்டு
தத்துவங்களை சொல்லும்
போதி மரம் அவரின்
சாய்வு நாற்காலி.

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...