சிலருக்கு
பணம் கவலை...
உறவுகளின் கவலை....
சிலருக்கு
பட்டு புடவை கவலை....
சிலருக்கு
படிப்பை பற்றிய கவலை...
சிலருக்கு
தந்தையின் சொத்தை
காப்பாற்ற கவலை...
சிலருக்கு
அப்பாவின் அன்பான
மொழி கிடைக்க
நினைத்து பாசத்தின் கவலை...
சிலருக்கு
உத்தியோக கவலை.... ஆனாலும்
சிலருக்கு
எந்த கவலையுமின்றி
எப்படி அவனால்
வாழ முடிகிறது என்றே கவலை....
கவலை இல்லாத
மனிதனா அப்படி
ஓருவனை இதுவரை
கடவுள் படைத்து இல்லையே....
இதை சொன்ன அந்த
பரதேசி பிச்சைக்காருக்கு
வெளியே காண முடியாத
கடவுளை இதயத்தில்
அன்பெனும் காதல் பெருக வைத்து
அன்பே சிவமாக
அவனை உள்ளத்தில்
நிறுத்தி வைக்க கவலை....
தேடுகிறார் கோவில்
கோவிலாக அவருக்கு என்றுமே
இறைவனை தேடும் கவலை
No comments:
Post a Comment