மீசை..


தன் காதல்
மனைவியை
பற்றி பேசும்போது...
அவளை ஆசையாய்
நினைக்கும் போதும்...
குழந்தையிடம்
பாசமாய் பேசும்போதும்..
தங்கைக்கு ஆதரவாய்
மச்சானிடம் சமரசம்
பேசும்போதும்
வியாபார நிமித்தமாக
ஆவேசமாய் பேசிட
முயலும் போதும்...
இறந்த வீட்டில்
கவலைப்படும் போதும்...
விபத்தில் கிடந்தவரை
தூக்கி தோளில்
சுமக்கும் முன்னரும்
தன்னையறியாமல் கைகளில்
அகப்படுகிறது மீசை.

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...