பொம்மலாட்டம்

ஆடும் ஆட்டமும்

பாடும் பாடலும்

அதிகார தோரணையும்

அந்தஸ்து ஆணவமென்றே

ஆட்சி அதிகாரம் கிடைத்து விட்ட

திமிரில் ஆடும் அரசியல்வாதி...

ஓட்டுப் போட்டு மக்களை

உதாசீனம் செய்து விட்டே

ஆடம்பர காரில் பறக்கிறார்...

வாழ்வின் தத்துவத்தை அறிந்த

வயதான பைத்தியகார கிழவரோ

மந்தகாச புன்னகையில்...

இவனை விடவும் பெரிய

ஆட்டங்களை ஆடியவனையும்

எதிர்பாராத நோய் ஆட்டிப் படைத்த

கதையை இப்போ சொன்னா

மண்டையில் ஏறவா போகுது..

சாமி...டீ கொண்டுவந்திருக்கேன்

தினமும் பரபரப்பாக பக்தருக்கு

அருளும் அந்த சிவாலயத்தில்

சுற்றி இருந்த மக்களை பற்றியும்

தனது இமேஜ் பற்றியும் சற்றும்

யோசிக்காமல் பம்மியபடியே நெடுஞ்சாண்கிடையாக

விழுந்து அந்த பரதேசியை 

வணங்கினார் முன்னாள் 

மந்திரி....என்னை நம்பாதே 

உள்ளே இருப்பவனை போய் 

கேளூ இந்த பிச்சைக்காரனுக்கு 

வேஷம் போட்டு விட்டவன் 

உள்ளே தானே இருக்கானென்றே 

கலகலவென்றே அதிரும் படி 

சிரித்தார்... எல்லாமே அவன் 

நடத்துற பொல்லாத பொம்மலாட்டம் 

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...