கலைஞன்.


இந்த உலகிற்குள்
பிறந்த போது
கொண்டுவந்தது
ஏதும் இல்லை
இறப்பின் போது
எடுத்து செல்வது
ஏதும் இல்லை...
உணர்ந்தே வாழ்கிறான்...
மின்மினி போன்ற
வாழ்வில் அடுத்தவரின்
முகத்தில் சந்தோஷம்
கண்டு மகிழ்த்துவிட
உயிர்வாழ்கிறான்....
ஆயினும் ஏனோ உலகம்
சொல்லுகிறது அவன்
பெரிய நடிகன்டா....
அந்த ஒற்றை அங்கீகார
வார்த்தைக்காகவே
தனது வாழ்வின்
பல கடினமான
கஷ்டத்தை கூட
யாரிடமும் பகிராமல்..
புன்னகையுடன் சிரித்து..
பிறருக்கும் மகிழ்ச்சி
பரப்புகிறான் எனது
அன்பு நண்பன்
சினிமாவின் கலைஞன்

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...