அன்பு காதலி


என்னுள் அவளும்...
அவளுக்குள் நானும்
கரைந்தே போனோம்...
உடல்களால் அல்ல..
பல மைல்களுக்கு
அப்பால் கூட்டத்தின்
நடுவே தனித்துவமாய்
தன்னை அடையாளப்படுத்த
நினைக்கும் அன்பு காதலி.....
என்னைப் போலவே அவளும்
தொலைந்து போன
எதையோ தேடுகிறாள்....
இதயம் இருக்கும்
இடம் தெரிந்தும்....
தொலைபேசி எண்கள்
தெரிந்தும் தொல்லைபேசியை
தவிர்த்து..... தொலைதூரத்தில்
இருந்தும் மனதால்
காதலை மாத்திரமே
உயிர்மூச்சாக நினைந்து
வாழும் என் அன்பு காதலி..

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...