திரை கடல் ஓடி திரவியம் தேடு


தமிழ், தெலுங்கு, கவின் மலையாளம், கன்னடம்,துளூ திராவிட மொழிகள்.
தமிழை இகழந்து பேசி புதிதாக வார்த்தை ஜாலம் கண்டுபிடித்தவர்கள் பேசியதே தமிழ் தான்.
ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க வேண்டி ஆங்கிலம் படித்து விட்டு தன்னை பெரிய அறிவாளி போல் எண்ணுகிறோம்...

வடமொழி புலமை இல்லாத குமரகுபரன் *சகலகலாவல்லி மாலை* சரஸ்வதியை நோக்கி படித்து காசி மன்னர் முன் சிங்கத்தின் மீது அமர்ந்து சென்று மடம் நிறுவ இடம் கேட்டார்....இது வரலாறு.
இன்றோ குறைந்த பட்சம் 15 ஆண்டு ஓர் மொழியை படித்து விட்டு இலக்கணப் பிழையுடன் தான் எழுதுகிறோம், சில நேரங்களில்.
கேட்டால் *Error is human*என்னும் பழமொழி.
ஆனால் தமிழ் மொழியின் *அடிப்படையே செய்வன திருந்தச் செய்*
16 மொழிகளை படித்து புரிந்து அந்த மொழிகளில் புலமை பெற்ற பாரதி சொன்ன வார்த்தைகள்.
*தமிழ் மொழி போல் இனிமையானது எங்கும் காணோம்*
தமிழ் மொழியின் மேன்மை இறைவனுடன் பேசும் வல்லமை கொண்டது.. வடமொழி என்பது இலக்கியம் மற்றும் பூஜை முறை பற்றி சொல்வது.
வடமொழி தமிழ் இரண்டுமே இந்தியாவின் மொழி சார்ந்த கலாச்சார ஆணிவேர்கள்.
ஹரப்பா மொஹஞ்சதாரா போன்ற இந்தியாவின் கலாச்சாரம் தொடங்கிய இடத்தில் கூட பசுக்கள் சூழுந்து நிற்கும் மனிதனை பசுபதி என்றே வணங்கியதாக பாட புத்தகத்தில் படித்த நியாயம்.

ஓர் வேளை வருங்காலத்தில் ஆங்கில பள்ளியில் மூன்று மொழி படிக்கும் பணக்கார வீட்டு பிள்ளைகள் போல்.
ஏழை நடுத்தர வீட்டு குழந்தைகளும் மூன்று மொழிகளை படித்தால் நன்மையே

ஹிந்தி என்பது இந்திய அரசாங்கத்தின் அலுவல் மொழி என்பதை ஜனநாயக முறையில் தேர்வு செய்தனர். அந்த மொழியை படிப்பதில் தவறு ஏதும் இல்லையே.

ஏதோ ஆங்கில கல்வியில் படித்த காரணமாகவே வெளிநாட்டில் வேலை கிடைத்தது என சில பூரிப்பாக பேசி ஆங்கில கல்வியே சிறந்தது என்பது ஓர் போலி பிம்பத்தை ஏற்படுத்துகின்றனர்.

தமிழகத்தின் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு ஆராய்ச்சிகள் தமிழர்கள் கடல் கடந்தும் சென்றும் வியாபாரம் செய்ததும்.அதன் காரணமாக சோழ பாண்டிய நாணயங்கள் ரோம் நகரத்தில் பாரசீக நாட்டில் கிடைத்ததாக பதிவு செய்து உள்ளனர்.

ஆங்கில வழி கல்வியை தமிழர்கள் கற்று கொள்ளும் முன்னரே தமிழர்கள் கடல் கடந்து சென்று உள்ளனர்.

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்பது தமிழர்களின் பழமொழி.

தமிழ் சமஸ்கிருதம் இரண்டுமே இந்தியாவின் சிறந்த பண்பாடுகளை கொண்ட மொழிகள்.

நாளை இந்திய அரசாங்கம் அனைத்து மக்களும் ஹிந்தி படிக்க வேண்டும் என்று சொன்னால். காசு செலவில்லாமல் ஏழை குழந்தைகளுக்கும் மூன்று மொழி கிடப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைவோம்.

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...