.
ப்ளீஸ்ப்பா
ஒண்ணே ஓண்ணு தானே
கெஞ்சி கேட்கும்
குழந்தையிடம்
சொல்ல மொழியின்றி
மனைவியின் சாட்டை
கண்களுக்கு பயந்து
நிற்கும் தந்தையின்
நிலைமை தெரியாமல்
செல்லம் கொஞ்சும்
ஆசை மகள்....
கடைசியாக அவனை
முத்தமிடுவது போல
சென்றவளின்
அன்பை பெற
துடித்தான்...
எதுவுமே தராமல்
கண்களை உருட்டி
வர வர உனக்கு
பாப்பா மேல
பயமே இல்ல....
சொல்லி விட்டு
விளையாட ஓடினாள்....
மழலை மொழியில்
குழந்தை ஆனால்
தலைவியின்
எரியும் கண்ணில்
இன்னும் பெருகியது
உஷ்ணம்..
ஒண்ணே ஓண்ணு தானே
கெஞ்சி கேட்கும்
குழந்தையிடம்
சொல்ல மொழியின்றி
மனைவியின் சாட்டை
கண்களுக்கு பயந்து
நிற்கும் தந்தையின்
நிலைமை தெரியாமல்
செல்லம் கொஞ்சும்
ஆசை மகள்....
கடைசியாக அவனை
முத்தமிடுவது போல
சென்றவளின்
அன்பை பெற
துடித்தான்...
எதுவுமே தராமல்
கண்களை உருட்டி
வர வர உனக்கு
பாப்பா மேல
பயமே இல்ல....
சொல்லி விட்டு
விளையாட ஓடினாள்....
மழலை மொழியில்
குழந்தை ஆனால்
தலைவியின்
எரியும் கண்ணில்
இன்னும் பெருகியது
உஷ்ணம்..
No comments:
Post a Comment