சொன்ன சொற்களை

 மறக்கவே முடியவில்லை...

.
.

பல வருடங்களுக்கு
பிறகு எதிர்பாராத
விதமாக கடைவீதியில்
ஓர் துணிக்கடையில்
சந்தித்தான்
பக்கத்துவீட்டில் வசித்த
தன் சிறுவயது தோழியை
தோழியின் கணவன்
புகழ் பெற்ற நிறுவனத்தில்
கைநிறைய சம்பாதிக்கிறானாம்.... தொலைபேசி எண்களை
வாங்கும் போது நீ எங்கே
வேலை பார்கிறே என்றபடி
என்னது இவ்வளவுதான்
சம்பளமா... எங்க கம்பெனியில்
காவலாளி கூட
இதை விட அதிகமாக
வாங்குகிறார் சம்பளம்..
பேச்சில் கணவனின் பெருமை
பேசி எதிரில் இருப்பவரின்
ஏழ்மையை குத்தினாள்....
தன் நிலை அறியாமல்
பேசியது தவறென்றே
தலை குனிந்து போனான்....
சில நாட்கள் கழித்து
இரவின் நடுநிசி வேளையில்
தொலைபேசி சிணுங்கியது
எதிர் முனை அவளின்
குரல் ரொம்ப அவசரம்
உன்னால வரமுடியா...
என்றவளிள் அழைப்பை
தட்டாமல் சென்றவனின்
கைகளை பற்றி கதறினாள்
உன் உதவியை மறக்கவே
மாட்டேன்... ரத்தம் பல இடத்தில்
கேட்டும் கிடைக்கல...
கடைசியா தான்...
அவளின் வார்த்தைகள்
குழறியது.... ம்ம்ம் புரியது....
மருத்துவமனைக்கு
வெளியே வந்த பிறகும்
மறக்கவே முடியவில்லை
துணிக்கடையில் அவள்
சொன்ன சொற்களை....

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...