அன்பு மனைவி


திருமணம்
ஆகிவிட்ட பின்னர்
சென்ற கல்யாண
வீட்டின் கூட்டத்தில்
முன்னாள் காதலியை
கண்டு பரபரத்த
கணவனை நோக்கி
"என்னங்க" என்றே
அதிகார தோரணை
செய்து இவன்
"என்னோட ஆளூ"
என்பதை சூசகமாக
சொல்லி அவனை
அதிகமாகவே
காதலிக்கிறாள்
அவனின்
ஆசைகாதலியான
அன்பு மனைவி
அவனின் காதருகில்
மெதுவாக சொன்னாள்
அன்புடன் வேணும்னா
நீங்கபோய் பேசுங்க
நான் ஓண்ணுமே
சொல்ல மாட்டேன்
அவனுக்கு அவளின்
அன்பு புரிந்தது
தேடி வந்து
பேசிவிட்டு போன
முன்னாள்காதலி...
கைகளை தொட்டு
கண்களை நோக்கினாள்
அவனின் கண்களில்
பன்னீர் துளிகள்...
எனக்கு புரியுது
உங்களின் பாசம்....
ஏனோ இருவரும்
பேசவில்லை
அதற்குமேல்

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...