தலைப்பு - ..மதத்தின் பெயரால் மானுடம் விலகுவது ஏன்.....
காதலையும் கடவுளையும் சரியாக புரிந்து கொள்ள இயலாத வேடிக்கை மனிதர்கள்... கடவுள்களின் இடத்தில் பணத்தை அதிகமாகவே கொடுக்கிறார்கள்.
வாசலில் குழந்தையுடன் பிச்சை எடுக்கும் அந்த பெண்மணியையும், வயதான காலத்தில் தன் பெரும் சம்பாதித்தியத்தை மகன், மகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு எழுதி வைத்த பிறகு தான். அவருக்கு புரிந்தது அவர்களின் உண்மையான முகம், தன்
சொந்த பிள்ளைகளால் கைவிடப்பட்டதை மறந்து, அடுத்த வேளை உணவிற்கு வழியின்றி கடவுள் இருப்பதாக சொல்லும் இடத்தில் காத்து கிடக்கிறார்.
கேட்காத கடவுளுக்கு பணத்தை வாரியிறைத்து விட்டு செல்லும் பணம் படைத்த கூட்டம் .
தங்கத்தில் அதை வாங்கி வையுங்க..இதை வாங்கி வையுங்க என்று சொல்லும் போலி ஆட்கள்...
கடவுள் மனிதன் படைத்த பணத்தை கேட்கவே இல்லை
மாறாக தான் படைத்த அன்பையும் அமைதியையும் மனிதனில் காணவே விழைகிறார். .
புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே...
உங்களின் தூய மனதையும் பக்தியும் மட்டுமே கேட்கிறார்.ஆனால் அந்த பக்தியை ஓர் குறிப்பிட்ட சாதி மக்களால் தான் செய்ய முடியும் என்று நம்ப வைத்துவிட்டனர்..
கண்ணப்பனும், திண்ணணும், மாணிக்கவாசகர்... போன்ற இன்னும் எண்ணற்ற இறை தொண்டர்கள் எல்லா ஜாதியும் மதமும் கடந்து.. மனிதர்களுள் ஓர் சராசரி மனிதாபிமாக வாழ்ந்தனர்.... பணத்தை விடுத்து இறைவன் படைத்த இயற்கை என்னும் பாசத்தை தேடி அவர் வாங்கி பட்டம்.
ஆனால் இந்த கணிணி முன்னேறிய காலத்திலும்.
தனது ஜாதியை மட்டுமே உயர்வாக சொல்லி, ஓர் சில குறிப்பிட்டவர்கள் பிற மக்களை புறக்கணிப்பது ஏன்...
ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடங்களை நடத்தி விட்டு ஜாதிமத அடையாளங்களை இன்னும் உயர்த்தி பிடிப்பது எதற்காக
உலகம் ஏன்றுமே பொய்களைத் தான் அதிகமாக நம்புகின்றது...மாட்டு தொழுவத்தில் விளையாடிய கடவுளுக்கு ஏது தீட்டு.ஏது ஜாதி..ஏது. மதம்...
உலகின் பல மதங்களும் இறைவனை அன்பே வடிவானவன் என்று தானே சொல்கிறது...
இந்து, கிறித்தவம், இஸ்லாம், புத்த ஜைன மதங்களும் இப்படி தானே சொல்கிறது ..
கடவுள் ஒருவரே என்றால் ஏன் மற்றொரு மதத்தை உலகில் உருவாக்கி...வேற்றுமையை தான் படைத்த மனிதனின் மனதில் விதைக்க வேண்டும்...
அப்படி என்றால் கடவுள் குழப்பவாதியா... அல்லது தன்னை யார் அறிந்து கொள்கிறார் என்று போட்டி வைக்கும் போட்டியாளரா...
சில மதவாதிகள் செய்யும் அலப்பறைகள், உண்மையான இறை தேடல் உள்ள நபர்களை கூட கடவுள் என்பவரே இல்லை போல என்ற சிந்தனைக்கு தள்ளுகிறது
உண்மை உணருங்கள் மக்களே...
மதங்கள் மனிதன் மனிதனாக வாழ தோன்றிய நாகரீக வளர்ச்சி...
இறந்த பிறகு நான் எங்கே போவேன் என்று யாருக்கு தெரியும்...
..... போன்றவை கதையை நம்புவதை விடுத்து...
சக மனிதனை மனிதனாக மதித்து வாழவே மதங்களை தோன்றியது என்பதை உணருங்கள்...
நான் சில மத நூல்களை படித்து தெரிந்து கொண்டேன்....( என்று என்னை நானே உயர்வாக நினைத்து கொண்ட அறிவிலி செயல், கடவுளை அறியும் அறிவு எனக்கு ஏது..)
தன்னை வணங்காமல் தூற்றியே வாழும் மனிதனுக்கு கூட கடவுள் உணவு கொடுக்கிறார்கள்...
ஏனெனில் அந்த கடவுள் அந்த மனிதன் அவனின் அந்திம காலத்தில் படுத்த படுக்கையில் கிடக்கும் போது.. உடல் வலிமையில் பேசிய பேச்சுக்களை நினைத்து வருந்தி இறைவனிடம் மன்னிப்பு கேட்பான் என்று கடவுளுக்கு தெரிந்து அவனை பாது காக்கிறான் என்று...
மதங்களை தெய்வத்தை உணரும் வழியாக பாருங்கள்.
மனிதனை மனிதனாக மதித்து நடக்கும் பண்பை போற்றுவோம்..
இறப்பிற்குப் பிறகு நடக்கும் விஷயங்களை மறந்து இயன்ற நல்லதை செய்வதில் அமைதியை தேடுவோம்.
மதத்தின் பெயரால் மானுடம் விலகாமல்
No comments:
Post a Comment