அடிப்பாவி...


காதல் பாடலை
தனிமையில் தனிமையாய்
ரசித்தவளை தள்ளி நின்று
ரசித்தவனாய் அருகே சென்று
காதல் சொன்னேன்...
குய்யோ முறையோயென்றே
கத்தி இருந்தாலும் விலகியிருப்பேன்..
கண்ணை பார்த்து பேசும்
தைரியம் பாராட்டியவள்..ஏனோ
நகையை காணவில்லையென்றே
கவலைப்பட்டாள்......
இல்லையென்றே எத்தனையோ முறை
மன்றாடிப்பார்தேன்... நீங்க தான்
எடுத்தீங்க கதை சொன்னாள்
மானம் ரோஷம் என்று
புது நகை வாங்கி கொடுத்தேன்..
பல வருடங்களுக்கு பிறகு
சொன்னால் இதயத்தை
திருடியதாய் சொன்னால்
ஒளிந்து விளையாடியிருப்பாய்...
எனவேதான் தோள்களில்
சாய்ந்து சிரிக்கிறாள்..
குழந்தையாய் என்
கனவு தேவதை.‌...
கல்யாணமாகி பத்து வருஷமாச்சு
மனதிற்குள் புலம்பினேன்
அடிப்பாவி....

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...