விடிவெள்ளிகள்..

 

.
.
ஏழையாய்
இருந்தவனுக்கும்
சந்தர்ப்ப சூழ்நிலையால்
ஏழையாய் மாறியவனுக்கும்
ஏழைகளின்
வலிகளும்
வேதனைகளும்
புரிகிறது...
பணத்தை வைத்து
பாசத்தை விலை
பேசும் பகட்டான உலகம்...
பாசத்தை மட்டுமே
பவித்திரமாக நினைத்தே
வாழும் ஏழைகளின்
கண்ணீரை பார்த்தும்
பார்க்காத மாதிரியே
கடந்து செல்லும் சில
அற்பமான மனிதர்கள்...
ஏனோ இன்னும் உலகம்
பரிகசித்து சிரிப்பதும்...
ஏழைகளை பார்த்தே.... ஆனால்
ஓவ்வொரு நாளின்
விடியலிலும் பலரை
நம்பி ஏமாந்த பிறகும்
ஏழை என்ற உன்னத
அடைமொழியுடன்
நம்பிக்கையின் கீற்று
மீதமிருப்பதால்
நடுத்தர மற்றும்
பணக்கார வர்க்கத்தின்
முன்னால் வாழ்ந்து விட
துடிக்கும் ஆயிரக்கணக்கான
ஏழைகள் மக்கள் தான்
இந்தியாவின்
விடிவெள்ளிகள்

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...