தாயின்.....

 தாயின்.....

.
.
.
உணர்ச்சியின்
பெருக்கில்
அன்பை மாத்திரமே
மனதில் தாங்கி
வாழும் அன்பே அவள்
குழந்தைகளின்
எதிர்காலத்தை
எதிர்பார்த்து
வாழ்த்தாளாம்
ஓவ்வொரு நாளின்
தொடக்கத்திலும்
பத்து பாத்திரம்
கழுவும் வேலைக்கு
செல்லும் முன்னரெல்லாம்
சொல்ல மறப்பதில்லையாம்
நல்லா படிச்சு
நல்ல வேலைக்கு
போய் கஷ்டப்படும்
நாலு பேருக்கு உதவு..
சில நேரங்களில்
கிழிந்த புடவையில்
தெருவோரமாக நடந்து
செல்லும் பெண்மணியின்
கைப்பிடித்து நடக்கும்
சிறு குழந்தை
கண்டால் கண்ணில்
உணர்ச்சியின் வேகம்
இப்படித்தான் எங்க
பூட்டி ஆச்சி சொல்லி
வளர்த்தா என்ற
அப்பாவின் நெஞ்சு
விம்மியது....ஏதோ
பேச முடியாமல்
அவரின் உணர்ச்சியை
உணர்வும் முடியாமல்
ஆறுதல் சொல்லவும்
தெரியாமல் இருந்த
நாட்கள் சில.....
மறைவுக்குப் பின்னரும்
அவரின் வரிகளை
நினைக்கும் போது
நண்பன் யதார்த்தமாக
சொன்ன வரிகளை
நினைக்கும் போது
உணர்கிறேன் ஓர்
தாயின்.....

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...