சொரி நாய்...


.
.
அனாதை நாய்......தம்பீ உங்களுக்கு ஜாதகத்தில் தோஷம் இருக்கு அதனால தெருவில் அனாதையாக அலையும் ஏதாவது ஓர் சொரி நாய்க்கு தொடர்ந்து மூன்று மாசம் ஓரு வேளை பிஸ்கட் பொட்டலம் வாங்கி போடுங்க..அது அப்புறம் பாருங்க.. நல்ல உத்தியோகம் மட்டும் இல்லாமல் பணக்கார வீட்டுக்கு மாப்பிள்ளையா போகிற பாக்கியம் கிடைத்தாலும் ஆச்சரிய பட ஏதுமில்லை..
அவனும் ஜோசியகாரர் சொல்லிய மாதிரியே பிஸ்கட் வாங்கி போட்டான்... முதல் மாதத்திலேயே நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தது...
ஜோசியரை போய் சொன்னான்..தம்பீ நீங்க விடாம அந்த நாய்க்கு பிஸ்கட் போடுங்க..மூணு மாசத்துக்கு பிறகு உங்க நிலையே வேற... இரண்டாம் மாதத்திற்குள் கல்யாண பேச்சு தொடங்கி நல்ல பணக்கார வீட்டிற்கு மாப்பிள்ளையாக போனான்...பிறகு அந்த சொரி நாயை மறந்தே போனான்... ஆனால் அந்த நாயோ தினமும் அவன் பிஸ்கட் வைத்து இடத்தில் வந்து நின்று கொண்டு அவனின் வரவை எதிர்பார்த்தது...சில மாதங்களுக்கு பிறகு அந்த வழியாக வந்தவனின் கார் பஞ்சராகி நின்ற போது, தூரத்தில் இருந்து அவனை பார்த்து பாசமுடன் ஓடி வந்து அவனின் அலங்காரமான உடையை உரசியது..சனியனே தூரப்போ... அடித்து விரட்டினான்...
அப்போது செல்போன் சிணுங்கியது,ஜோசியகாரர் பேசினார்..தம்பீ பெரிய ஆளாயிட்டீங்க.. இன்னிக்கு பேப்பரல தலைப்பு செய்தி நீங்க தான்... அரைமணி பேச்சில் ..அது வந்து உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு எல்லாம் நம்ம அருமை பெருமைகளை எடுத்து சொல்லுங்க... இது வரைக்கும் எனக்கு எந்த ஆசையுமில்லை.. ஆனால் இனிமே நான் உங்களின் ஆஸ்தான ஜோசிய கான் என்று சொல்லுவதில்லை தான் எனக்கு பெருமையே இருக்கிறுது ..கண்டிப்பா சாமி நான் அப்படியே பண்ணுறேன்...உங்க அருமை பெருமையை நான் நிச்சயமாக நாலு பேரிடம் சொல்லுவேன்.. கண்டிப்பாக சொல்லுறேன் சாமி, இன்னிக்கு நான் நல்லா இருக்கு நீங்க தானே காரணம்... நான் அந்த நன்றியை என்றுமே மறக்க மாட்டேன்...
தெருவின் முக்கில் நின்று கொண்டு வேடிக்கை பார்த்தது சொரி நாய்...சில மாதங்களுக்கு பின்னர் தொழில் நஷ்டமான பிறகு சொரிநாயைதேடி வந்தான்....அது ஓரமாக நடந்து போனது....எவ்வளோ கூப்பிட்டும் அது திரும்பியே வரவில்லை... நேராக குப்பை கிடங்கில் போய் அங்கே கிடந்த அழுகிய பொருட்களை சாப்பிட்டது....கையிலோ விலையுயர்ந்த வெளிநாட்டு பிஸ்கட்.... ஆனால் அந்த நாய் குப்பையில் போய் எதையோ தேடிச் சாப்பிட்டது

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...