பாரதி என்பது பெயர் அல்ல ..


தமிழரின் உயிர் எழுத்து...
இனி ஓர் விதி செய்வோம்...
.
.
தமிழ் மொழியின் மீது பற்று கொண்ட அனைவரையும் ஏதோ ஓர் விதத்தில், தமிழ் மொழியின் மீது மயக்கம் கொள்ள வைத்தவன்...
தனது எழுத்துகளால் அனைவரையும் கட்டிப்போட்டவன் . மகாகவி பாரதி...
அவரின் மீது மாறாக காதல் கொண்ட காரணத்தால் தனது குழந்தைகளுக்கு பாரதி என்று பெயர் வைத்து பெருமை கண்டனர்...
இது வரையில் எல்லாம் சரியாகவே நடந்தது.
சிறுவயதில் கவிஞரின் பெயரை கொண்டவர்கள்.. தன்னை கவிஞராக நிலைநிறுத்த பிரயத்தனங்கள் செய்ய வில்லை...
அவர்களுக்கு நன்றாகவே பெற்றோர்கள் சொல்லிக் கொடுத்தனர்...
மகாகவி என்னும் பெயரை உனக்கு சூட்டி விட்டேன்... ஆயினும் உலகில் முண்டாசு கவிஞர் அவர் ஓருவரே....
பிறகு எங்கே தொடங்கியது பிரச்சினை...
எழுத்தாணியை தொட்டு பார்த்த காரணத்தால் தன்னை கவிஞர் என்று அடைமொழியில் அழைத்து பெருமை கொண்டனர்.. இதிலும் கூட தவறேதுமில்லை..
ஏனென்றால் சுதந்திர இந்தியாவில் அனைவருக்கும் எழுத்திலும் பேச்சிலும் சுதந்திரம் உள்ளது..
அடைமொழியும் பட்டங்களும் அவர்களின் சொந்த விருப்பம்.அதில் யாருமே தலையிட வில்லை...
சில வருடங்களுக்கு சில கவிதைகளை எழுதிவிட்டு தனக்கு சில அடைமொழியுடன் பாரதி என தனக்குத் தானே பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.இதுவும் கூட தவறில்லை...
பேனாவை பிடிக்கும் அனைவருக்கும் உள்ளே மகாகவி, காளிதாசன், கண்ணதாசன், வைரமுத்து, நா.முத்துகுமார்...புலமைபித்தன்..தி.க.சி..போல் தன்னை நினைத்து கொள்வது இயல்பு...
.
.
தன்னை நடிகராக இயக்குனராக குணசித்திர வேடங்களிலும் நிலைநிறுத்தி கொண்ட பார்த்திபன் என்பவர், ஓர் பேட்டியில் சொன்னார்.கவிதை எழுதும் அனைவருக்கும் எட்டயபுரத்துக்காரர் போன்று நினைப்பது வழக்கம்... ஆனால் அவரின் துணிச்சல் அசாத்தியமானது...
.
.
புதுக்கவிதை எழுதி இருக்கிறேன்..இதை கவிதை என்று நீங்கள் சொல்லலாம், ஆனால் இது வெறும் கிறுக்கல்கள்...
.
.
அவரிடம் இருந்த தெளிவும், தைரியமும்....நான் குறிப்பிட்ட அனைத்து கவிஞர்களில் மனதிலும் இருந்தது..
இவர் தன் பெயருக்கு பின்னால் பாரதி என்று அடைமொழி கொடுத்து கொள்ளவில்லை...
ஆயினும் எழுத்து உலகில் சாம்ராஜ்யங்களை எழுப்பி விட்டனர்.......
.
.
ஓவ்வொரு கவிஞரும் தனது எழுத்தின் ஆளுமையால், பலரின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியது..
"கருப்புத் தமிழனே கலங்காதே" என்னும் எழுத்தில் தான் எத்தகைய வீச்சு...
அவர்கள் ஒவ்வொருவரும் தனக்கே உரித்தான தனிபாணியை உருவாக்கினர்...
.
.
தயவுசெய்து எழுத்திலும் ஆதிக்கம் செலுத்த நினைக்கும் நண்பர்களே...
பாரதியார் என்பவர் ஒருவர் மட்டுமே.. ஆளும் அதிகாரவர்க்கத்தை கண்டு பயப்படாமல் தனது பேனாவின் கூர்மையால்... ஆங்கில அரசை அசைத்து பார்த்தவர்...
அவரின் பெயரை அடைமொழியுடன் சேர்த்து கொள்ளுங்கள், அது உங்களின் தனிப்பட்ட விஷயம்..
ஆனால் எழுத்திலும் பேச்சிலும்
...அதை போலவே அவரை போல வாழ்ந்து காட்டுங்கள்....
இயற்கையை ரசிப்பதும்...
கண்ணம்மா பற்றிய பாடல்களும்....
கொண்ட கொள்கையில் சமரசம் செய்யாத
தைரியமும்.....
பேனா முனையில் வீரமும் ....
பல மொழிகளில் புலமையும் கொண்டவரே...
இந்த மாபெரும் கவிஞன்...
.
.
பாரதி என்பது பெயர் அல்ல ..
தமிழரின் உயிர் எழுத்து...
இனி ஓர் விதி செய்வோம்.

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...