கல்லறை காசு

பணம் பதவி

நகை நாகரிகம்
பட்டம் பம்மாத்து வாழ்க்கை
இந்த போலியான
பூச்சுகளை மெய் போல்
பாவித்து பழகும்
பல மனிதர்கள்
அவர்களின் ஓருவர் கூட
உண்மையானவர்
என்பதே கிடையாது...
மச்சான் அவனே
அடுத்த சொத்தை
ஆட்டைய போட்டவன்
அவன் சொத்தை
நாமும் ஆட்டைய
போடலாம் என்றே
அந்த பணக்காரன்
பின்னே சுற்றும்
கூட்டம் இவர்களை
முழுமையாக நம்பி
செயல்பட்டவனின்
காசு கரைந்த பிறகு
அவனுக்கு உண்மை
புரிந்த காரணத்தால்
உரக்க சொல்கிறான்
வியர்வை சிந்தி
உழைச்ச காசு தான்
கடைசி வரைக்கும்
அதனால் தான் போடுகிறோம்
இறந்தவரின் உடல்மீது
கடைசியாக
கல்லறை காசு

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...