காதல் என்பது உடல் அல்ல.அது ஓர் அழகிய உணர்வு.தனக்கு கிடைக்காத காதலிக்கு கூட களங்கம் கற்பிக்காத குழந்தை மனம் தான் காதல்.
பெண்ணின் மனதில் வந்த காதலை ஆண் புரிந்து கொள்ளும் போது பல ஆண்டுகள் கடந்து விடுகிறது.
காதலியின் உடலை விரும்பியவன் அவளை திருமணம் செய்து கொள்ளவே ஆசைபடுவான்.
அவளின் உணர்வுகளை காதலித்தவனோ.அவள் எங்கே இருந்தால் நன்றாக இருக்கவே நினைப்பான்.
ஏனெனில் தன்னை விட அவள் சிறந்தவள். அவள் என்னை கட்டிக்கொண்டு கஷ்டப்படுவதை விட நல்ல இடத்தில் வசதியா வாழணும் என்றே எண்ணுவான்.
ஏன்னா காதல் என்பது தந்தையின் பாசமும் சகோதரனின் அரவணைப்பும் போல் இருந்தால் அந்த காதல் திருமணத்திற்கு பிறகும் நிலைத்து நிற்கும்.
ஓர் வேளை காதலன் அல்லது காதலி இருவரில் ஒருவருக்கு உடல் சார்ந்த ஈர்ப்பு மட்டுமே இருக்குமானால் அந்த திருமணம் மணமுறிவில் தான் முடியும்.
என்ன செய்வது பிறந்த குழந்தைகள் அப்பா அம்மா என்று இருவரின் அன்பும் கிடைக்காமல் சமூகத்திலும் சில அவபெயரை தாங்கிக் கொண்டு வாழ முயல்கின்றனர்
சிலர் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டாலும் தன் முன்னாள் காதல் பற்றி சிலரே தன் மனைவியிடம் சொல்கின்றனர்.
சிலரோ அப்படியே தனிமையில் வாழ பழகிக் கொள்கின்றனர்.
வாழ்க்கை நீர்க்குமிழி போல் அவளை திருமணம் செய்த பிறகு நமக்கு ஏதாவது ஆகிவிட்டால் அதற்கு அவள் இப்போது இருக்கும் இடத்திலேயே வாழ்ந்தால் நல்லது என்றே மனம் நினைக்கும்.
நாட்டில் சிறந்த விளங்கிய சில திருமணம் செய்யாத தலைவர் / தலைவியின் மனதிலும் ஆறாத வடுக்களாக சில நினைவுகள் உண்டு.
என்றாவது ஓர் நாள் கோவிலுக்கு செல்லும் படி நேர்ந்தாலும் தன் காதலி குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கவே வேண்டுவான்.
அன்பு என்பது யாரையும் காயப்படுத்த நினைக்காது.அது தன்னை தானே காயப்படுத்தி அதில் ஓர் இன்பமான வலியை ரசிக்கும்.
காதல் என்பது ஓரே ஒரு முறை தான் வரும் என்பதும் கூட இந்திய சினிமாவில் கட்டமைக்கப்பட்ட ஓர் போலியான வாதம்.
ஆண் மனம் எப்போதும் தனக்கு சரியான ஓர் மனிதரை தேடுகிறது.
அது பெண்ணாக தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
அது ஓர் சிறந்த நண்பனாக, தோழியாக,வியாபார கூட்டாளியாக.. ஆன்மீக சுற்றுலா அல்லது ஊர் சுற்றும் ஓர் துணைவராக கூட இருக்கலாம்.
அல்லது தனக்கு பிடித்தமான மிருங்களை வாங்கி வளர்த்துக் கொண்டு அதன் மீது தன் கவனத்தை செலுத்தி வாழக்கையை நகர்த்தும் வழியாக கூட இருக்கலாம்.
மொத்தத்தில் காதல் என்பது உடல் அல்ல..உடலை பார்த்து பழகி வரும் காதல் சில வருடங்களில் சலித்து போகும்.
மனது மற்றும் உணர்வு ரீதியான காதல் இருந்தால் தான் கடைசி வயது வரை எந்த பிணைக்கும் இல்லாமல் இல்லறம் நல்லறமாக மாறும்.
No comments:
Post a Comment