அப்பா அம்மாவிடம்
கேட்டார் இன்னுமா
சமையல் ஆகவில்லை...
இந்தா சீக்கிரமே ஆகிவிடும்....
அம்மாவின் பதிலில் சுவாரசியமில்லை..
எப்போ தம்பி வேலைக்கு
போக போறீங்க... பக்கத்து
வீட்டுக்காரரின் அக்கறை கேள்வி....
அவன் பேங்க் பரீட்சை எழுதி இருக்கான்
முடிவு தெரிந்தவுடன் சீக்கிரம்
வேலைக்கு போய்விடுவான்....
அப்பாவின் பதில் தயக்கத்துடன்...
என்னம்மா கல்யாணமாகி ஐந்து வருடமாச்சு ஏதும் விஷயம் உண்டா..க
கைக்குழந்தையுடன் கேலிகலந்ந
நையாண்டியில் பெரியம்மாவின்
கடைக்குட்டி மகளுக்கு ..........
அசட்டு புன்னகையில் அக்கா சொன்னாள்.....
எல்லாம் விதிப்படி தானே
நடக்கும்.......
இத்தனையும் கேட்டு பழகிய
காரணத்தால். சீக்கிரம் சொல்வேன்...
என்று மலுப்பலாக பேசும் நண்பனின்
பதில் எனக்கு புதிதாக
தோன்றவில்லை......
இது எதிர்பார்த்த ஒன்றுதான்...
ஆட்டுவிப்பவனுக்கு தானே
அனைத்தும் தெரியும்...
சூழலும் பம்பரம் தான் மனித வாழ்க்கை...
சுற்றும் வரை தான் அதற்கு மரியாதை...
புரிந்து கொண்டதால் அமைதியாக...
யோசித்து பார்க்கிறேன்.... அனைவருக்கும் அவசரம்.... அவர்களின்
மனதில் விதைக்கிறேன் வார்த்தை...
சீக்கிரம் நல்ல சேதி சொல்லுறேன்.....
No comments:
Post a Comment