கொக்கு என்று நினைத்தாயோ

 கொக்கென்று நினைத்தாயோ, கொங்கணவா,.....

.

கானகத்தில் ஒரு மரத்தடியில் அமர்ந்து யோகப் பயிற்சிகளில் கொங்கண சித்தர் ஈடுபட்டபோது மரத்தில் அமர்ந்திருந்த கொக்கு ஒன்று எச்சமிட்டது. அது 

கொங்கண சித்தர் மீது படவே, அவர் கோபத்தில் மரத்தில் இருந்த கொக்கை முறைத்துப் பார்க்க அந்தப் பார்வையின் வெம்மை தாளாமல் கொக்கு பொசுங்கிச் சாம்பலானது.

இறைவனின் ஆசை தனது அடியாரை அடிக்கடி பட்டை தீட்டுவது.. ஆம் தன் பக்தரின் ஆணவம் தலை தூக்கும் போது எல்லாம் அவரை விட சிறந்தவரை காட்டுவது அவன் செயல்..


ஓர் நாள்  பிச்சைக்காக கிராமத்திற்கு சென்று ஓர்  வீட்டில் பிச்சை கேட்டார். 


அது மதியவேளை கடையில் இருந்து வந்த கணவனுக்கு உணவு பரிமாறிக் கொள்ளும் தருணத்தில்.. வீட்டு வாசலில் யாசகம் கேட்டவரை கவனிக்கவில்லை...

.

வீட்டு திண்ணையில் அமர்ந்தார்...

.

.தனது தவ வலிமையை காட்டினால் தான் மக்கள் பயப்படுவார்கள்...


சற்று நேரம் கழித்து வந்து உணவிட்டாள்...

அவளை கோபமாக பார்த்தார், கொங்கணவர்...

அவளோ சிரித்து கொண்டே சொன்னாள்... நான் கொக்கு என்று நினைத்தாயோ...கொங்கணவா...

 இவளுக்கு எப்படி இந்த விஷயம் தெரியும்.. குழப்பத்தில் ஆழ்ந்தார்.. அம்மா எனக்கு சில சந்தேகங்கள் உள்ளது... பதில் சொல்ல முடியுமா கேட்டார்...

.

ஜயா,  எனக்கு சில வேலை இருக்கு..உங்களை மாதிரி நான் ஒண்ணும் வேலை வெட்டி இல்லாமல் இல்லை.என்றாள்...

.

அவருக்கு தர்மசங்கடமாக இருந்தது...

.

உங்கள் குழப்பத்தை தீர்க்க ஒருவரால் தான் முடியும் என்று ஓர் ஊரில் வாழும் ஒருவன் பெயரை சொல்லி விட்டு வீட்டிற்குள் சென்றாள்....

எங்கோ கானகத்தில் நிகழ்ந்த சம்பவத்தை அறிந்திருக்கிறாளே என்று கொங்கணர் அதிர்ச்சியுற்றதோடு அந்தப்பெண்ணை வணங்கினார். .

ஆண்டவா, என் ஆணவம் அழிந்தது.ஆயினும் மனதில் உள்ள கேள்விக்கு பதில் வேணுமே....

.

.

மனிதனின் மனம் எதையும் எப்போதும் தவறாகக் சிந்தித்து குழப்பம் கொள்ளும்...இந்த அம்மா, ஏன் அவன் பெயரை சொல்கிறார்..


ஓரு வேளை இவரது சொந்தமா? நட்பா?

யோசித்தவாறே அந்த ஊரை சென்று அடைந்தார்....

.

. அந்த மனிதரின் பெயரை சொல்லி கேட்டார் சிலர் இவரை ஏறஇறங்க பார்த்தனர்...

இந்த சாமியாருக்கும் கசாப்புக்காரனுக்கும் என்ன சம்பந்தம்....

.

சிலர் கேள்வியாக கேட்டு விட்டனர்... அப்போது நினைத்தார் ஓரு வேளை இப்படித்தானே அந்த அம்மாவும் இருப்பாங்க...

.

அவங்களை தவறாக நினைத்தோம்.. இப்போது இவங்க என்னை தவறாக நினைக்கிறார்கள்... இறைவனின் கணக்கு சரியாக அமைகிறது..

.

ஓரு வழியாக அவனின் இடத்தை அடைந்தார்...

அவனோ, இவரை சட்டை செய்யவில்லை...

.

.

ஏதோ சொல்ல வந்தவரை, பெயர் சொல்லி அழைத்தான்..

.

என் வேலையை முடித்து விட்டு தான் பேச முடியும்..அதுவரை இந்த கட்டையில் அமருங்கள்..கறி வெட்டும் பலகையை தூக்கி கொடுத்தான்..

.

.

அவருக்கோ சங்கடமாக இருந்தது.. குளித்து சிவ சின்னங்கள் அணிந்து சுத்தமான ஆடை உடுத்தி இருக்கும் நான் எப்படி.. இங்கே அமர முடியும்.

.

சுற்றிலும் பார்த்தால் இறைச்சி வெட்டிய கழிவுகள்.. அதற்காக சண்டை போடும் தெரு நாய்கள்... ஒருவேளை நம்மை கடித்து விட்டால்... அசுத்தமான இடத்தில் எப்படி அமருவது எண்ணியபடி இருந்தவரை....நிலைகுலைய வைத்தது.. அவனின் அடுத்த பதில்...

.

.

.

கொங்கணரே, உமது சிந்தனையை விட, இந்த இடம் தூய்மையானது தான்..

.

.

வேறு வழியின்றி அங்கே அமர்ந்தார்.இவன் சொல்லுவது எத்தனை சரியான பேச்சு...

உதட்டிலும் உடலிலும் இறைவனின் அடையாளங்கள், ஆனால் சிந்தனையோ மிகவும் தவறாக...

.

.

தனது வேலையை முடித்து வந்தவன்.. அந்த அம்மாவே பதில் சொல்லி இருக்கலாம்.. எதுக்காக என்னிடம் அனுப்பினாங்களோ....

.

.

சில வார்த்தைகள் சொன்னான்.அவருக்கு மேலும் ஆச்சர்யம்.

.

.

ஐயா, நானே குழப்பத்தில் உள்ளேன். உங்களின் பேச்சு எனக்கு ஆச்சரியமாக உள்ளது.. நான் இல்லறம் துறந்து பல வருடங்களுக்கு தவம் செய்தேன்.. அப்போது ஓர் கொக்கு தலையில் எச்சமிட்டது.. கோபமாக பார்த்தவுடன் அது எறிந்து போனது....

.

.

உங்களை பார்த்தால் பெரிய தவசீலர் போல இல்லை.ஆனால் எப்படி இந்த சித்துக்கள் உங்களுக்கு வந்தது...

.

.

அவன் அமைதியாக சிரித்தான்...

காடுகளில் சென்று தவமிருப்பது...கடவுளை காண அல்ல..தன்னை அறியவே.... ஏனென்றால் தன்னையறிவதே சிறந்தது...

தியானம், யோகம், மூச்சு பயிற்சி என்பது போன்ற பல வழிகள் சித்த சுத்தி ஏற்படுத்தி தன்னை அறிய ஏற்படுத்தப்பட்ட வழிமுறைகள் மட்டுமே....

.

இவற்றில் ஒன்று கூட தெரியாமல், தனது கடமையை செய்பவருக்கும் சித்த சுத்தி ஏற்படும்..

.

.

என்றுமே குருவை மிஞ்சும் சிஷ்யர்கள் உண்டு.. ஆயினும் தனக்கு வழிகாட்டிய மனிதரை வழிகாட்டியாக ஏற்றுக்கொள்வது நமது குரு பரம்பரை...

குரு என்பவர் சிஷ்யனின் பக்குவத்தை பார்ப்பவர்... அவனின் பொருளாதார சமூக ஏற்றத்தாழ்வுகள் அல்ல...

.

மனிதருக்கு சில கடமைகள் உண்டு.அதை சரியாக செய்பவரை நாளும் கோளும் என்று இடைஞ்சல் செய்யாது...

.

.

அவற்றில் சில தனது தாய் தந்தை பேணுவது.

கணவனுக்கு உதவியாக இல்லற தர்மத்தின் படி வாழ்வது...

மனைவிக்கு உண்மையாக நடப்பது...

குழந்தைகளின் தேவைக்கு தனது தேவைகளை தியாகம் செய்வது...

விருந்தினரை பேணுவது...

எனவேதான் துறவறத்தை விட இல்லறம் சிறந்தது...என்றான்....

.

.

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...