உன்னத மகிழ்ச்சி

வேண்டாம் என்றே

விலகி ஓடுபவனை

பிடித்து மேடையில்

அமர வைத்து

தலையில் கிரீடம்

சூட்டி மகிழ்ந்துவிட 

உங்களுக்கு ஏன் இந்த

அவசரம்... மலர் மாலை

வேண்டி வரிசையில்

பல பேர்.... காத்திருக்க....

என்னை மேடைக்கு

அழைப்பது ஏன்...

நீங்கள் காட்டும்

பாதையை விட...

நான் நடைபழகிய

பாதை போதும்...

அதில் முட்களும் இல்லை...

மலர்களும் இல்லை.. ஆனால்

அதில் தான் எத்தனை எத்தனையோ

ஆனந்தம்... செயற்கை வேண்டாம்...

இயற்கை போதும் அதுவே என்

உன்னத மகிழ்ச்சி


No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...