கார்த்திகை தீபம்

 எத்தனை இடைஞ்சல்கள், கவலைகள் அத்தனையும் மறக்கவும், தன்னை வெறுத்து ஒதுக்கிய உறவுகளையும் பண்புகளையும் யாரிடமும் குறை சொல்ல நினையாமல்.

மனதின் சஞ்சலத்தை போக்க வேண்டி, தேடி அலைந்தேன் "குரு"...

ஏன்ப்பா, இவ்வளவு கஷ்டத்திலும் உன்னால் சிரிக்க முடியுது.. கேட்கும் மனிதருக்கு எல்லாம் புன்னகை பதிலாக கொடுத்து விட்டு.

மனதிற்குள் மருகினேன், தொல்லை தரும் வாழ்க்கை வேண்டாம்.மனிதப்பிறவியில் தான் வார்த்தையில் சொல்ல முடியா, சிக்கல்கள் ஏராளம்.

திக்கு தெரியாமல் அலைந்தவனுக்கு குருவாய் வந்தான்/ள்..(அண்ணாமலை, உண்ணாமுலை)..

ஓர் முறை திருவண்ணாமலை போய் விட்டு வா.நல்லதே நடக்கும்...

அடிக்கடி காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும்"நல்லதே நடக்க வேண்டி, திருவண்ணாமலை வந்தேன்..வந்த பின்னர் தான் தெரிகிறது.என்னைவிட அதிகம் பேர் இருக்கிறார்கள்...

பணத்திற்காக, பதவிக்காக, மனைவிக்காக, கணவனுக்காக, பிள்ளைகளுக்காக, பங்குதாரர்களால் ஏமாற்றப்பட்ட பின்பும்.. "அவன் நல்லவன் தான், ஏன் இப்படி செய்தார்.அது தான் தெரியணும்"...

இன்னும் பல தேடல்கள், இந்த மலையை சுற்றி அலைபவர்கள் ஏராளம்...

எப்படியாவது ஓர் நல்ல நிலைமைக்கு வர வேண்டி, துடிப்பவர்கள் ஆயிரம்...

அவனோ கண்களை மூடி தியானத்தில் இருக்கிறான்...

உலகத்தை படைத்தவனே, தன் பொறுப்புக்களை மனைவியின் வசம் கொடுத்து விட்ட பின்னர்..

அவளும் என்ன சளைத்தவளா??, தன் கணவனுக்காக அவனருகே அமர்ந்து விட்டவள்.

 தன் கணவனை தவிர உலகில் உயர்ந்தது ஏதுமில்லை என்பதை தனது செயல்களால் காட்டுபவள்....

எல்லாம் எனக்கு தெரியும், என்ற இறுமாப்பு உடைந்து விட்டது.

ரமணரும், சேஷாத்திரி மும், விசிறி சாமியாரும் பல பல ஜாம்பவான்கள் சுற்றிய மலையை நானும் சுற்றுகிறேன்...

அவர்கள் எல்லையில்லா இறைவனை தேடினார்கள், நானோ அற்பன் மனிதரில் மானுடம் தேடுகிறேன்..சொந்த பந்தகளுக்காக, நட்புக்காக, என்னையே நம்பி, எனது கம்பெனி தவிர வேறு ஏதும் தெரியாத எனது தொழிலாளர்களுக்குக்காக... மனமுருகி வேண்டுகிறேன்.... கம்பெனியின் பொருளாதாரம் மீள வேண்டும்...

வியாபாரத்தின் மீது கொண்ட அதீத காதலால், இன்று வங்கி மேலாளர்கள் தினமும் அழைத்து பேசும் போது.. மனம் பதறுகிறது...

ஆசையே துன்பத்திற்கு காரணம்...இனி மிகவும் கவனமாக நடக்க வேண்டும்..

என்னையே நம்பி வாழும் சில தொழிலாளர் குடும்பங்கள்.. என் பசியை விட, அவர்களின் எதிர்காலம் பற்றி பதறுகிறது......

அண்ணாமலையானே, உன்னை நம்பி இத்தனை பேர்.. அவர்களின் கோரிக்கை நான் அறியேன்...

அடுத்த முறை வரும் போது, பல கோடி லாபம் கிடைத்தால் கூட, இன்று வாழும் எளிமையான வாழ்க்கை வாழவே நினைக்கிறேன்... ஆடம்பரம் வாழ்க்கை வேண்டவே வேண்டாம்...


ஏதோ தேடி வந்தவனுக்கு புரியாத விஷயம் பல உண்டு என்று உணர வைத்தான், இந்த ..... அத்தனையும்  உன் செயலே...

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...