அப்பாவி அப்பா

 சென்ற வாரம் வரை நானும் அவரும் உருகி உருகித்தான் காதலித்தோம்.

எனக்காக அவரும் அவருக்காக நானும் மாறி மாறி காத்திருந்தோம்.சில நிமிட தாமதத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் இருவரும் பல முறை கேள்வி கேட்டது உண்டு..

ஏய் பைத்தியம்...நீ இப்போ எங்கே வந்துட்டு இருக்கே சொல்லு... அவனை அவளும், அவளை அவனும் கொஞ்சி கூப்பிடும் செல்லமான அன்பு மொழி அது 

சில நேரங்களில் மழை, வேலை, மற்றும் பிற காரணங்களால் வர தாமதமாகும் போது மனமுருகி நெஞ்சுக்குள்ளே அழுத நாட்கள் உண்டு..


எத்தனையோ முறைகள்.. ஆனால் 

இருவருமே ஒருவருக்காக ஓருவர் ஏங்கிய கதையை பிறரிடம் சொன்னதில்லை..

ஓவ்வொரு நொடியும் அவ எங்கே இருந்தாலும் ரொம்ப நல்லா இருக்கணும்.

அவளோட எந்த குறையும் வந்திட கூடாது என்றே அப்பாவி குழந்தை போல அவளை இன்னும் அதிகமாகவே காதலிக்கும்


தான்  விரும்பிய பெண் நேற்று முதல் அடுத்தவன் உடைமை என்பதை உணர்ந்த பிறகும் முட்டாளைப் போல, அவளை இன்னும் நினைத்த படியே வாசலில் அமர்ந்து கொண்டு அவள் அமரும் இடத்தை வெறித்த படியே பார்த்து வெறுமையாய் சிரிக்கும் அந்த முட்டாள் காதலன் 

ஏன் இன்னும் சாப்பிட வரலை...8மணிக்கு பசிக்குது பசிக்குதுன்னு உயிரை எடுப்பீங்க..மணி 10.30 ஆச்சு இன்னுமா சாப்பிட வரலை என்று எரிச்சல் பட்ட மனைவியிடம்..


கொஞ்ச நேரம் என்னை அமைதியாக தனிமையில் இருக்க விடு..நீ வேணா போய் சாப்பிட்டு விட்டு படு...

வீட்டிற்குள் சென்றவள் உறங்கிக் தான் போனாள்...

ச்சே இவ்வளவு நேரமாவா தூங்கிட்டோம் அலறி அடித்து எழுந்தவள் பக்கத்தில் தன் கணவனை காணாது பரிதவித்து இந்த மனுஷன் எங்க போனாரோ தெரியலையே..

வாசலுக்கு கதவருகே வந்தாள்...அவனோ  இன்னும் தொலைபேசியை பார்த்தபடியே அமர்ந்திருந்தான்


ஏங்க நீங்க ராத்திரி பூரா இங்கேயேவா உட்கார்ந்து இருந்தீங்க...


போன வாரம் கூட அவ சொன்னா டீ.. அப்பா என்னால உன்னை மறக்கவே முடியாது.. தினமும் ஒரு மணி நேரத்துக்கு ஓரு தடவை உன்னை கூப்பிடுவேன்.. ப்ளீஸ் அப்பா நீ என்கிட்ட பேசாம இருந்திராதே.. எனக்கு எல்லாமே நீதானே..

சொன்னவன் சின்ன குழந்தை போல தேம்பித்தேம்பி அழுதான்..

ச்சீய் என்னங்க இது சின்ன புள்ள மாதிரி அழுதுகிட்டு ..அவ அவளோட புருஷன் கூட சந்தோஷமா இருப்பா.. அதான் உங்களுக்கு போன் பேச மறந்திருப்பா மேலும் புது இடம் புது மனுஷங்க அவளுக்கு அங்கே என்ன பிரச்சினையோ..

சொன்ன அடுத்த நொடி எழுந்து பாத்ரூம் நோக்கி போனான்.. சீக்கிரமா உப்புமா பண்ணு நான் வெளியே கிளம்புறேன் 

கடைக்கு போக சொன்னால் பத்து காரணம் சொல்பவன்  

இன்றோ மகளை பார்க்க கிளம்பி போகிறான்...ஓரு வார்த்தை கூட அவனுக்கு கேட்கவும் தோணவில்லை..மாறாக அவளும் கேட்கவில்லை ஏதோ மகள் மீதான பாசம் தனக்கு மட்டுமே சொந்தம் என்பது போல தன்னந்தனியாக செல்கிறார்.


செய்து வைத்த உணவை சாப்பிட மனமில்லாமல் அடுப்பங்கரையில் சென்று காபி போட்டு குடிக்கும் போது மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்.


அவள் உங்களை அப்படி கூப்பிடும் போதெல்லாம் அவளை திட்டியது உண்ங

ஏன்டீ உன்னை பெத்த அப்பனை லூசூ பைத்தியம்ன்னு கூப்பிடுறீயே உனக்கு என்ன வாய்க்கொழுப்பு


இன்றே அதே வார்த்தையை அவளும் உச்சரித்து பார்த்தாள்..

ஏய் லூசு நீ உலக அறிவே கொஞ்சமும் இல்லாத அப்பாவி அப்பா 

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...