அன்புள்ள அப்பா

 அவருக்கு பிடித்த நெய் முறுக்கு, மசால் தோசை, கூட்டாஞ்சோறு என பெரிய கடையில் இருந்து பார்சல் வர செய்தவள்.அப்பாவுக்கு போன் செய்தாள்.. இன்னிக்கு நீங்க எங்க கூட தான் சாப்பிடணும்.அவளின் அளவிட முடியாத அன்பில மயங்கி சரிம்மா உன் இஷ்ட படியே செய். அம்மாவும் உன்னை பார்க்காம எங்கி போயிட்டா..

இன்னும் பத்து நிமிஷத்துல அங்கே வந்திட போறாம்.மகளை பார்க்க போகிறோம் என்று பூரிப்பில் தட்டு தடுமாறி எழுந்து போய் முகம் கழுவி வந்து கட்டிலில் அமர்ந்தார்.

நாலு தெரு தள்ளி இருக்கிற நாயீ இப்போ எதுக்கு புதுசா நம்மளை வந்து பார்க்கணும்..அவ பேசின பேச்சு எல்லாம் உங்களுக்கு வேணா மறந்து போயிருக்கலாம் எனக்கு எதுவுமே மறக்காது.. ரேஷன் கடை பொங்கல் சேலையை துவைத்தே பத்து நாட்கள் ஆனது போல இருந்தது

அவ வந்துட்டு போன பிறகு தானே உங்களுக்கு புத்தியில் நல்லா உறைக்கும், அது வரைக்கும் நான் எது சொன்னாலும் மரமண்டைக்கு ஏறாதே..

தன் மனைவியின் பேச்சு வேப்பங்காயை விட ரொம்பவே கசப்பது போல் இருந்தது அந்த வயதான கிழவனுக்கு.


இப்போ வந்துட்டு கொஞ்ச நேரத்தில் போக போற புள்ள, அவளை எதுக்குடீ இப்படி கரிச்சு கொட்டுறே..

ம்க்கும் உங்களுக்கு புத்திர பாசம் கண்ணை கட்டுது..வந்து நல்லா தெளிய வைப்பா பாருங்க.

வாசலில் கார் வந்து நின்றது அதிலிருந்து ஓர் பெரிய வியாபாரி இறங்கி வருவது போல் வந்தாள்.

அம்மா தாயீ, அவசரமாக ஓடி சென்று கட்டிப்பிடிக்க பாய்ந்தவர்.. ஏதோ  அமலாக்க துறையை கண்டு விலகும் அமைச்சரை போல பத்து தள்ளிப்போனாள்.


அப்பா எத்தனை தடவ சொன்னாலும் உங்களுக்கு புத்தியே வராதா... அடுத்த ஓர் மணிநேரத்தில் எனக்கு  கிளப் மீட்டிங்.. உங்க வியர்வை படிஞ்ச கையால் என்னோட விலையுயர்ந்த பட்டு புடவை அழுக்கு ஆக்கிடாதீங்க..

நல்லா சொல்லு பிரபாவதி.. உங்க அப்பாவுக்கு வயசு ஆயிடுட்டே போகுதே தவிர அறிவு வளரவில்லை.

அது வந்து அப்படி இல்லாம்மா, பத்து நிமிஷம் தான் எனக்கு டைம் இருக்கு அதான் இன்னிக்கு Father's day...இவரை பார்த்துட்டு அப்படியே ஓர் செல்ஃபி எடுக்கலாம்ன்னு வந்தேன்.

கிழவிக்கு எதுவுமே புரியாவிட்டாலும் புரிந்த மாதிரி தலையை நன்கு ஆட்டினாள்.

அப்பா இப்படி வந்து பக்கத்தில் நில்லுங்க. பயந்த படி அருகில் வந்தவருடன் செல்ஃபி எடுத்தால்...


கன்னத்தோட கன்னம் உரசி இருப்பது போல் இருக்கும் போட்டோவை பார்த்து. இன்னிக்கு உங்க அப்பா நிம்மதியா தூங்குவாரூ என்றவளை முறைத்த படி கேட்டாள்.

ஏன் என்னாச்சு, இப்படி சொல்லுறே..


அவரு தினமும் புலம்புவாரூ, நீ சின்ன புள்ளையா இருக்கும் போது சொன்னபடியே கேட்க மாட்டேன்.. ராத்திரி பத்து மணிக்கு அவர் வந்தவுடனே என்னை பத்தி குறை சொல்லும் போது என் செல்லக்குட்டி அப்படின்னு அவரு உன்னை கன்னத்தை உரசி முத்தம் கொடுப்பாரூ.அதுக்கு அப்புறம்தான் நீ சமாதானம் ஆகி தூங்குவே.. இன்னிக்கு நீ அவர் கன்னத்தை உரசியாச்சுல்லா..

இது மனுஷன் ஆறு மாசத்துக்கு பழைய கதை சொல்ல மாட்டாரூ...

பிறகு என்னத்தை சொல்லுவாராம்..


நீ இப்போ உரசுன கதையை புதுசா சொல்லிகிட்டு திரிவாரூ...

ச்சே.நான்சென்ஸ் இதுக்கு தான் நான் உங்கள பார்க்க வருவதே கிடையாது..

சரியான நாட்டுப்புறம்..கொஞ்சமாவது இங்கிதம் இருந்தா உனக்கு இப்படி பேச தோணுமா... நான் ஒண்ணும் அவர் கன்னத்தை உரசலை 


No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...