என் பையன் சிங்க குட்டி

 

ரொம்ப பேசாதடீ.. என் பையன் சிங்க குட்டி போன வாரம் கூட ஓர் பொண்ணு வீடு 50 லட்சம் வீடு அவன் பெயரில் எழுதி தருவா சொல்லிட்டு போனாங்க.. ஜாக்கிரதையா இருந்துக்கோ என்ற மாமியார்..அவளை ஓடி வந்து என்னம்மா என்னாச்சு என்று குழந்தை..

ஓண்ணுமில்ல கண்ணா அம்மா கண்ணுல தூசி விழுந்துடுச்சு..

ஒழுங்கு மரியாதையா போடுற சோத்தை நின்னுகிட்டு கிட.நான் தான் இந்த முட்டாள் பயலுகிட்ட சொன்னேன் அந்த பொண்ணு சரியான விபரம் பத்தாதவளா இருக்கா இப்பவே அவளை லவ் பண்ணுற மாதிரி நடி..பத்து பேர் கிட்ட நடிச்சா இரண்டு பேர் லவ்வு விழுவாங்க..

அதுல எது நல்லா படிச்சு சொன்ன பேச்சைக் கேட்குற மாதிரி இருக்கோ அதை கட்டி வைக்கிறேன்னு நான் தான் சொன்னேன்..

நீ என்னடான்னா கல்யாணத்துக்கு முன்னாடி சாது மாதிரி இருந்துட்டு இப்போ வந்து ஆயிரம் விதிமுறை சொல்லி குடுக்குறீயா..

ஓரே நிமிஷத்துல உன்னை உங்க அப்பன் வீட்டுக்கு அனுப்பிச்சு போடுவேன் பார்த்துக்கோ..

என் மச்சான் மகன் லாயர் தான் நினைச்சா இரண்டு மாசத்துல டைவர்ஸ் வாங்கி புடுவேன் என்றே கொக்கரித்த மாமியார்.

ஏதோ சட்டத்தை காய்கறி கடையில் வாங்கும் காய்கறி போல பேசினாள்..

எதெல்லாம் நினைச்சவுடனே டைவர்ஸ் வாங்க முடியாது குறைந்த பட்சம் ஓர் வருஷமாவது ஆகும்.. மேலும் இரண்டு குழந்தைகள் பெத்த பிறகு டைவர்ஸ் எதுக்கு கேட்குறீங்க.ஏனோ உதடு வரை வந்த சொற்களை 32 பற்களுக்குள்ளே தடுத்து வைத்தாள்.

கதவு அருகில் சாய்ந்த படி அமர்ந்தாள் கண்ணில் சாரை சாரையாக கண்ணீர் மல்கியது


காதலிக்கும் போது அவன் சொன்னவை எல்லாம் பொய் என்பது திருமணமான ஓர் வாரத்திலேயே புரிந்து போனதால் விதியை நொந்து கொண்டாள்

 வீடே அமைதியாக இருந்தது..

வீட்டிற்குள் விசில் அடித்த படி உற்சாகமாக வாசல் படி நுழையும் முன்பே சற்று சத்தமாகவே சொன்னான். நீ சொன்ன மாதிரியே எல்லாம் நடக்குதும்மா.. அவகிட்ட இப்போ தான் வீடியோ-ல பேசினேன்.இரண்டாம் தாரமா இருந்தாலும் பரவாயில்லை என்று சொல்லிட்டா.. எப்படிம்மா நீ ரொம்பவே புத்திசாலி

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...