கேலரி கட்சிக்காரர்கள்

கட்சி மாறினால்

காட்சி மாறுமா...

காட்சி மாறவே

கட்சி மாற்றமா ..

அரியணையில்

இருப்பவருக்கு

அழைப்பு மணி வந்ததா..

ஆராய்ச்சி மணியோசை

அதிகார மையங்களை 

அசைத்து பார்த்திடவே...

ஆண்டவனின் விளையாடவா...

ஆள்பவர்களின் ஆட்டமா...

அமைதியாக வேடிக்கை

பார்க்கும் சராசரி மக்கள் கூட்டம்

யார் வென்றாலும்

தோற்றாலும் அவர்களுக்கென்ன

என்றுமே ஓரே கட்சிதான்

அடுத்தவர் வீழ்ந்தால்

கைகொட்டி விமர்சிக்கும் 

கேலரி கட்சியை 

சார்ந்தவர்கள் 



No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...