இன்னும் எத்தனை
முறை தான் முகத்தில்
அடித்தார் போல்
சொல்லுவதோ
தெரியவில்லை...
ராசியில்லாத தாடிக்காரனை
அரசியல் மேடையில்
பேசினாலே ஆபத்து தான்
முன்னொரு காலத்தில்
கழகத்தில் கலகத்தை
விளைவித்து தமிழக
அரசியலில் புயலை கிளப்பி
வீறுநடை போட்டு வீராப்பு
வசனம் பேசி கட்சியை
ஆர்பாட்டமாக ஆர்ப்பரித்தே
தொடங்கி தமிழகத்திற்கு
புதிய மலர்ச்சியை
தரவிரும்பிய பலரில்
அவரும் ஓருவர்... அரியணையில்
இருந்தவர் மருத்துக்கு கூட
மறந்தும் பேசியதில்லை...
அண்ணனின்
வழியில் தம்பியாக நடத்த
தலைவர் முன்னவர்...
தமிழகமே திருப்பிப் பார்த்தது
பின்னவர் ஏற்படுத்திய பிளவை
ஆனால் விதி வலியதன்றோ...
பதவியில் அமர பயந்த பயந்தாங்கொள்ளி
தாடிக்காரனை
புகழ்ந்து பேசினார் பிறகு
அரசியல் வாழ்வில்
அஸ்தமனம் கண்ட
தலைவர்கள் பலர்..
அவரின் பெயரும்
இடம்பெற்றது....
அரசியல் புரிந்தவருக்கு
நன்றாகவே புரியும்...
புரியாதது மாதிரியே
தாடிக்காரனை தலை மேல் தூக்கிவைத்தே
அரசியல் காவடி தூக்கினால்
அரசியல் ஆண்டியாவது திண்ணம்
அரசியல் புதிரில்..
அரசியல் புதைகுழியில்.
சிக்கிவிடும் அந்த
அரசியல் கட்சி....
இதற்கு முன்னரும்
மன்னராக தன்னையெண்ணி
தரணியாள துடித்தே
மீசையை முறுக்கியவர்..
மூச்சு முன்னாறு தடவை
பாரதியை புகழந்தவர்...
கடைசியாக தாடிக்காரனை
புகழ்ந்து மேடையில் பேசினார்
தொடங்கியது ஆட்டம்..
இப்போதோ அவரின்
அரசியல் நிலையை
நினைத்தாலே நிலைகுலைகிறது ..
மிகவும் திறமையானவரையும்
திறமையற்றவராக
மாற்றி விட்டது
தாடியின் ராசி