773 -கங்கை கொண்ட சோழபுரம்

 "சோழநாடு சோறுடைத்தது"

என்ற பழமொழியை

மாற்றி எழுத தணியாத 

ஆசைகொண்ட ராஜராஜசோழன்

கடாரத்தை வென்ற பிறகு 

நிலையான புகழ் தேடி

கட்டினான் தஞ்சை 

பெரிய கோவில் 

தந்தையின் வழியில் 

கங்கை கரையை வென்றுவிட்டு 

தனையன் உருவாக்கினான் 

கங்கை கொண்ட சோழபுரத்தில் 

சிவாலயம் ..அன்று சோழன் 

உருவாக்கிய சரித்திரத்தின் 

புகழை பாரெல்லாம் 

பறைசாற்ற காசியின்

கங்கை கரையில் வரலாற்றை 

தொடங்கிய இந்தியாவின் 

பிரதமர் வருகை தருகிறார் 

சோழ நாட்டிற்கு. தமிழகத்தின் 

சோழநாட்டுப் சிவாலயத்தின்

சிறப்பையும் பெருமையையும் 

உலகெல்லாம் உணர்த்த

சிவனை வழிபட்டு தமிழின் 

தொன்மையை

தரணியெங்கும் அறிந்திட

பெரிய புராணத்தின் 

கோஷம் விண்ணை 

தொட்டு விடவே மக்கள் 

கூட்டம் ஆர்ப்பரித்து 

நிற்கிறது சேக்கிழார் 

வரியில் நாமும் சொல்வோம் 

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்


நிலவு உலாவிய நீர்மலி வேணியன்


அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்


மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்கெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்...'. 

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...