மாதத்தவணை

 அம்மா.....அப்பா எப்போவருவார் சொல்லு..

அடம்பிடிக்கும் அவனை 

மார்போடு தழுவிய படி 

அவனின் முகத்தில் 

முத்தமிட்டாள்.... நீ ஏன் 

இப்படி இருக்க.  இரண்டு நாளா

டிவியும் பார்க்க விடலை 

ஸ்கூலும் போகவிடலை..

போன வாரமே 

ஸ்கூல் பீஸ் கட்டியாச்சே...

அப்பாவுக்கு தெரிஞ்சா

ரொம்ப மனசு கஷ்டபடுவாரூ

நமக்காக தானே கேரளா  

போயிருக்காரூ...I love you Appa 

அப்பாவின் கல்யாண புகைப்படத்தை 

முத்த மழையால் நனைய வைத்தான்

கேரளாவில் தண்ணீர் மழை 

என் அப்பாவுக்கு முத்த மழை....

கள்ளமில்லாமல் பேசிய

மழலையின் மொழியை 

மறுக்க இயலாது 

மெளனமாய் இருந்தாள்...

சிணுங்கியது செல்போன் 

பல நாள் பசியில் கிடந்த 

புலி.... மான் மீது பாய்வது போல் 

பாய்ந்தே எடுத்தாள்....

கலங்கிய கண்களும் 

நடுங்கிய கைகளுமாய்....

ஏய் புள்ள செல்வி என்ற வார்த்தையை

கேட்ட மாத்திரத்தில்

அந்த தெருவே வந்து 

வாசலில் நிற்கும் படியாக 

சத்தமிட்டாள்.. நீங்க இங்கேயே 

வந்துடுங்க...... என்னங்க...

எதிர்முனையில் உணர்ச்சியற்றே

சொன்னான்.... நான் கிளம்பி வாரேன்டீ...

காசு பணமெல்லாம் சம்பாதிக்கிற 

ஆசையை மண்ணாகிப் போச்சு...

வாசலில் நின்ற கூட்டமோ..

என்னவாச்சு என்றே எட்டிபார்த்தனர்

அவளோ வேகமாக

சமையலறைக்குள் ஓடிச்சென்று 

சீனி பாட்டிலை எடுத்து வந்து 

வாசலில் நின்ற அனைவருக்கும் 

கொடுத்து மகிழ்கிறாள்..... உதடுகள் 

முணுமுணுக்கிறது..ஏலே பாண்டி இந்தா நீயும் எல்லோருக்கும் குடுலே......அவரூ வந்தவுடனே

நாமெல்லாம் முதல் வேளையா..கருப்பனுக்கு போய் பொங்கல் வைக்கணும்... ஏதும் புரியாத அவனின் மனதிலும் முகத்தில்

மகிழ்ச்சி தாண்டவமாடியது... ரொம்ப ஜாலி. .. தாத்தா பாட்டிக்கு இந்த செல்ல குட்டக தான் வெல்லக்கட்டி... தாங்கள் ஏழைகள் என்பதையும் மறந்து சுற்றி நின்ற பங்களா 

வாசிகளுக்கு ரேஷன் சீனியை 

கொடுத்து... தன் குடும்பத்தின் பாசத்தை அனைவரின் 

மனதிலும் விதைக்கிறாள் பணத்தை விட பாசமே பெரியதென்றபடியே.....செல்வி.... மனதின் உணர்ச்சிகளை அடக்கி கொண்டு வார்த்தைகளில் நடிக்க தெரியாத 

கிழவி மெலிதான மொழியில் சொன்ன வார்த்தைகள் 

எல்லோர் காதுகளிலும் ரீங்காரமிட்டது 

காசு பணம் இல்லாட்டியும் ரோஷக்காரியான இவளை 

கட்டிய அந்த மகராசன் புண்ணியவான்...

"ஆமாம் பணத்தை விட பாசமே பெருசு" 

என்றபடி தனது ஆட்டோவை எடுக்க 

முயல்கின்றான் பக்கத்து வீட்டு 

கேசவன்.... அவனின் மனைவியோ புன்னகைத்தாள்... நல்ல வேளை நீங்க என் பேச்சை கேட்டு கேரளா போகலை...

"மச்சான் வந்தா மறக்காம சொல்லு" அடுத்த வாரம் எப்படியும் இந்த மாச ஆட்டோ மாத தவணை கட்டிவிடுவேன்....





No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...