தாய்

 *தாய்க்கு எல்லாம் தெரியும்*


தன்னை பார்க்க வரவில்லை என்று தாய் என்றுமே வருந்த மாட்டாள்...

தனக்காக அவன் செய்த ஓவ்வொரு செயலுக்கும் பின்னால் உள்ள அவனின் உழைப்பும்.

அதற்காக அவன் பட்ட கஷ்டத்தையும் தாய் ஒருத்தியே அறிவாள்.


என்ன உன்னை பார்க்க வராம அவனுக்கு அப்படி என்ன பெரிய வேலை..

லீவு போட்டு விட்டு வர வேண்டியது தானே என்று அவளுக்கு எதுவுமே செய்யாதவர்களின் பேச்சும் அதன் பிண்ணனியும் அவளுக்கு தெரியும்...

ஓர் வேளை அவனுக்கு லீவு கிடைத்தால் ஓடி வந்துவிடுவான்...

வேலை நிமித்தமாக அவனுக்கு ஆயிரம் அழுத்தங்கள் ஆயினும் சிரித்து கொண்டே வேலை பார்க்கிறான்... தான் வணங்கும் தெய்வத்தை கூட தாயாகவே நினைத்து பழகியவன்

இன்று ஊரில் கோவில் கொடை என்னப்பா எல்லோரும் உன்னை தான் தேடுறாங்க என்ற போதும்...

வேலை அப்படி.. அதான் நீங்க எல்லாரும் இருக்கீங்களே எனக்கும் சேர்த்து கூப்பிடுங்க என்று சந்தோஷமாகவே சொல்கிறார்...

ஆயிரம் பேர் வந்து பால் அபிஷேகம் செய்தாலும் தன் மகனின் அருகிலே இருந்து காப்பாற்றுகிறாள்...

தாய்

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...