பேராசை


யார் மீதாவது
உனக்கு கோபம்
வருமா கேட்டேன்?..
எங்க ஆபிஸ்ல கூட
யாரும் வேலை
செய்யவில்லை
என்றாலும் எனக்கு
கோபம் வராது... நீ
முதலாளி தானே
சந்தேகமாக கேட்டேன்...
ஆமாம் ஆனாலும்
நான் அப்படியே
பழகிவிட்டேன் சொன்ன
சொல்லில் உண்மை
தெரிந்தது...... எதற்கும்
கோபப்பட்ட நான்...
பலவருட முயற்சிக்கு
பிறகே சிறிதளவு முன்னேற்றம்
இதற்கே கிடைத்தது
பட்டம் பைத்தியக்காரன்...
எண்ணிப்பார்த்தால்...
அன்று அவனும் எனக்கு
அப்படித்தான் தெரிந்தான்...
கோவிலை சுற்றி வந்து
அமைதியை தேடுகிறான்..
பல லட்ச முதலுக்கு முகத்தில்
கவலையே இல்லை அவனிடம்
யார் மீதும் துவேஷம் காட்டாத
மனநிலை அவனிடம் கற்றது..
பணத்தாசை துளியும் இல்லை...
அது ஒன்றே நட்பை விதைத்தது
ஆசையில்லா மனிதா ? இறைவன்
அப்படி யாரையாவது இதுவரையில்
படைத்தானா அவனுக்குள் இருந்தது
மிகப்பெரிய ஆசை அது உண்மை தான்
புத்தரைப் போல உலகத்தை தனது
அன்பால் அரவணைக்கும் அதீதமான
பேராசை...

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...